Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நான் கற்பனை பண்ணிக் கூட பார்க்கலை' கஷ்டப்படும் மாணவிக்கு பிரபல நடிகை கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்!
மும்பை: நீட் தேர்வுக்குப் படித்து வரும், கஷ்டப்படும் மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி செல்போன் வாங்கிக் கொடுத்து அசத்தி இருக்கிறார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக பலர் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது.
பல தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன.
எக்ஸலென்ட்.. என வாழ்த்திய ரஜினி.. லீக்கான போன் ஆடியோ.. கவலையில் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்!
கிர்கிஸ்தானில்
நடிகர் சோனுசூட், புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல, சொந்தப் பணத்தை செலவழித்து உதவினார். பல்வேறு மாநிலங்களில் தவித்து வந்த பலருக்கு அவர் உதவினார். கிர்கிஸ்தானில் தவித்த மாணவர்களை இந்தியா அழைத்து வரவும் அவர் உதவி செய்தார். ஆந்திராவில் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்துக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.
நடிகை டாப்ஸி
இந்நிலையில் நடிகை டாப்ஸியும் இப்போது மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து உதவி இருக்கிறார். லாக்டவுன் காரணமாக இப்போது ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்கு லேப்டாப், ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று தேவை. லாக்டவுனால் கஷ்டத்தில் இருக்கும் பலர், ஸ்மார்ட் போன் வாங்கும் நிலையில் இல்லை.
ஸ்மார்ட்போன்
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் தனது மகள்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மனைவியின் நகைகளை விற்று கல்வி கட்டணம் செலுத்தி உள்ளார். அவரது மகள் பியூசியில் 94 சதவிகித மார்க் எடுத்துள்ளார். நீட் தேர்வுக்கும் படித்து வந்தார். இதுபற்றிய செய்தி மீடியாவில் வெளியானதை அடுத்து, நடிகை டாப்ஸி அந்த மாணவிக்கு உதவ முன்வந்தார்.
நம்பவே முடியவில்லை
இதையடுத்து ஐபோன் ஒன்றை வாங்கி அனுப்பி உள்ளார். 'எனக்கு நடிகை டாப்ஸி மேடம் அனுப்பிய போன் இன்று கிடைத்தது. அது ஐபோன். என்னால் நம்பவே முடியவில்லை. இதுபற்றி கற்பனை கூட செய்ததில்லை. கடினமாக படித்து நீட் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். உங்கள் ஆசி என்னுடன் இருக்கட்டும்' என்று கூறியுள்ளார்.
கல்வி அறிவு
இதுபற்றி நடிகை டாப்ஸி கூறும்போது, 'நிறைய பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு அதிகமான டாக்டர்கள் தேவை. அதற்கான எனது சிறு முயற்சி' என்று ட்விட்டரில் கூறியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் நடிகை டாப்ஸியையும் அவரது உதவியையும் பாராட்டி வருகின்றனர்.
மித்தாலி ராஜ்
நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். இதற்கிடையே இந்தி சினிமாவுக்கும் சென்றார். அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சமீபத்தில் தப்பாட் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இப்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் கதை உட்பட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
-
கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!