Taapsee Pannu: டாப்ஸி வாங்கிய புது சொகுசு கார்... விலை இத்தனை கோடியா..? அடேங்கப்பா!!
மும்பை: தனுஷின் ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழை விடவும் தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வரும் டாப்ஸி, புதிய கார் வாங்கியுள்ளார். மெர்சிடிஸ் மேபேக் ரக காரை வங்கியுள்ள டாப்ஸியின் போட்டோ வைரலாகி வரும் நிலையில், அதன் விலை குறித்தும் தெரியவந்துள்ளது.

டாப்ஸி வாங்கிய புது கார்: ஜும்மண்டி நாதம் என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக ஆங்கிலோ இண்டியன் பெண்ணாக நடித்திருந்தார் டாப்ஸி. அதனைத் தொடர்ந்து வந்தான் வென்றான், அஜித்தின் ஆரம்பம், அனபெல்லி சேதுபதி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், தமிழை விடவும் தெலுங்கு, இந்தியில் டாப்ஸிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால், ஒரு கட்டத்தில் தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க இந்தியில் கவனம் செலுத்தினார். அதேபோல், தெலுங்கிலும் டாப்ஸியின் படங்கள் ஹிட் அடித்தன. இதனால், தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி.

ராஷ்மி ராக்கெட், சபாஷ் மித்து, தட்கா என டாப்ஸி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கானின் டுங்கி படத்தில் கமிட்டாகியுள்ளார் டாப்ஸி. படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த டாப்ஸி, இப்போது புது கார் வாங்கி அசத்தியுள்ளார். Mercedes Maybach GLS SUV ரக காரை வாங்கியுள்ள டாப்ஸியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

முக்கியமாக இந்த காரின் விலை 2.9 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த சொகுசு கார் தான் டாப்ஸியின் மிகப் பெரிய கனவாக இருந்ததாம். பாலிவுட்டில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதால், 3 கோடி ரூபாய் மதிப்பிலான காரை அசால்ட்டாக வாங்கியுள்ளார் டாப்ஸி. இதன்மூலம் நடிகைகளில் அதிக விலை கொண்ட கார் வாங்கிய நடிகைகளின் பட்டியலில் டாப்ஸியும் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











