அந்த ஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினார்கள்.. பிரபல ஹீரோயின் பகீர்!

By

சென்னை: ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில், ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. இதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்த அவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

தப்பட் கவனிப்பு

தப்பட் கவனிப்பு

அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சூர்மா உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இதனால் அங்கு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தப்பட் படமும் கவனிக்கப்பட்டது. அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக்கான சபாஷ் மித்து படத்தில் நடிக்க இருக்கிறார்.

அனபெலில் 2 வேடம்

அனபெலில் 2 வேடம்

தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக அனபெல் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் டாப்ஸியும் விஜய் சேதுபதியும் இரண்டு வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படம் இது.

ராஷ்மி ராக்கெட்

ராஷ்மி ராக்கெட்

இப்போது இந்தியில் ராஷ்மி ராக்கெட் படத்தில் நடித்துவரும், டாப்ஸி சமீபத்தில் தனது காதலர் மற்றும் சகோதரிகளுடன் மாலத்தீவுக்கு டூர் சென்றிருந்தார். அங்கிருந்து புகைப்படங்களாக பதிவிட்டு வந்தார். இவர், ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் சில பகீர் தகவல்களை கூறியுள்ளார்.

மோசமான அனுபவம்

மோசமான அனுபவம்

சினிமாவில் நடிக்க வந்தபோது தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் பற்றி அவர் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை என்பதற்காக என்னை ஒரு படத்தில் இருந்து நீக்கினார்கள். ஒரு முறை நான் டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போது, ஹீரோவுக்கு அந்த வசனம் பிடிக்கவில்லை.

மாற்ற வைத்தார்

மாற்ற வைத்தார்

அதனால் அதை மாற்றச் சொன்னார். மறுத்துவிட்டேன். பிறகு எனக்குத் தெரியாமல் டப்பிங் ஆர்டிஸ்டை கொண்டு மாற்றினார்கள். இன்னொரு படத்தில், ஹீரோவின் காட்சியை விட எனது அறிமுகக் காட்சி நன்றாக இருந்ததால் அதை மாற்ற வைத்தார்.

தயங்கும் ஹீரோக்கள்

தயங்கும் ஹீரோக்கள்

அந்த ஹீரோ நடித்த முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக, இப்போது அவருடன் நான் நடிக்கும் படத்தின் சம்பளத்தைக் குறைக்கச் சொன்னார்கள். இதை எல்லாம் கடந்துதான் வந்தேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்கும் நடிகைகளை, சில ஹீரோக்கள், தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தயங்குகிறார்கள். இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X