அந்த இடத்தில் டாட்டூ போட்ட டாப்சி.. பிங்க் பட ரகசியத்தை இப்போ ஓப்பன் பண்ணியிருக்காரு!

மும்பை: தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்சி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Recommended Video

தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதையில் டாப்ஸி-வீடியோ

அமிதாப் பச்சன் உடன் இணைந்து டாப்சி நடித்த பிங்க், இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மேலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

படு பிசி

படு பிசி

பிங்க் படம் கொடுத்த வெற்றியின் மூலம் பாலிவுட்டில் இப்போ டாப்சியின் கொடி உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில் ரிலீசான தப்பட் திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. மேலும், ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து உள்ளிட்ட பல படங்கள் டாப்சி நடிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன.

நோ மீன்ஸ் நோ

நோ மீன்ஸ் நோ

கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தை அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கி இருந்தார். அமிதாப் பச்சன் மற்றும் டாப்சி லீடு ரோலில் நடித்திருந்தனர். பெண்கள் நோ சொன்னால் அதற்கு நோ என்று மட்டும் தான் அர்த்தம் மறைமுகமாக யெஸ் சொல்கிறார்கள் என்பது பொருளல்ல என்பதை ஆணித்தரமாக உணர்த்தியது பிங்க் படம்.

பிங்க் ரீமேக்

பிங்க் ரீமேக்

டாப்சி, அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பிங்க் படத்தை தமிழில் தல அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் ரீமேக் செய்திருந்தார். நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் கடந்த ஆண்டு வெளியான அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற டைட்டிலில் பிங்க் படம் ரீமேக் ஆகி வருகிறது.

பிங்க் டாட்டூ

அந்த படத்தில் நடிகை டாப்ஸி மார்புக்கு மேலே கழுத்துக்கு கீழே பறவைகள் பறப்பது போன்ற டாட்டூவை போட்டிருப்பார். மினாலி என்ற கதாபாத்திரத்தை நினைவூட்டும் விதமாகவே சிறையில் அடைபடாமல் சிறகடித்து பறக்கும் பறவை டாட்டூவை பயன்படுத்த இயக்குநர் அறிவுறுத்தியதாக தற்போது, வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் டாப்சி ரிவீல் செய்துள்ளார்.

டாட்டூ பிரியை

டாட்டூ பிரியை

பிங்க் திரைப்படத்தில் வரும் மினாலி கதாபாத்திரத்தை போலவே நிஜ வாழ்விலும் நடிகை டாப்ஸி ஒரு தீவிரமான டாட்டூ பிரியை. படங்களுக்கு சம்மந்தம் இன்றி தனது முதுகு மற்றும் ஒரு காலில் டாட்டூ வரைந்துள்ளார் டாப்ஸி. லாக் டவுனில் இருக்கும் நடிகர்கள், தங்கள் பழைய நினைவலைகளை அசைப்போட்டு வருவது போல பிங்க் பட டாட்டூ குறித்து தற்போது டாப்ஸி பேசியுள்ளார்.

செம போல்ட்

செம போல்ட்

பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே என்று கிளாமர் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல், தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாக போல்டாக லீடு ஹீரோயினாக பல உமன் சென்ட்ரிக் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் டாப்சி. அவரது அந்த கேரக்டருக்காகவே பல ரசிகர்கள் டாப்சியை ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X