மும்பையில் சொந்தமா 2 வீடு, பி.எம்.டபுள்யூ காரு: கலக்கும் டாப்ஸி
மும்பை: டாப்ஸி துணிந்து ரிஸ்க் எடுத்ததற்கு கை மேல் பலன் கிடைக்கத் துவங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோவை காதலித்து, மரத்தை சுத்தி சுத்தி டான்ஸ் ஆடிய டாப்ஸி பாலிவுட்டில் செட்டில் ஆக முடிவு செய்தார். பாலிவுட்டில் வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடிக்கத் துவங்கினார்.

எடுத்த எடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அவரின் திறமையும், கடின உழைப்பும் வீண் போகவில்லை. தற்போது பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையா மாறியுள்ளார் டாப்ஸி. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான கேம் ஓவர் படத்தை பார்த்துவிட்டு அவரின் மிரட்டல் நடிப்பை புகழாதவர்களே இல்லை.
சமூக வலைதளங்கள் பக்கம் போனாலும் கேம் ஓவர் தொடர்பாக டாப்ஸியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். 30 வயதிற்குள் சொந்தமாக வீடு, கார், கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் என்பதே டாப்ஸியின் கனவு. அந்த கனவு நிறைவேறிவிட்டது.
ஒன்று அல்ல மும்பையில் 2 வீடுகளை வாங்கியுள்ளார் டாப்ஸி. இரண்டாவது வீட்டை அண்மையில் தான் வாங்கினார். முதல் வீட்டை போன்றே இந்த வீட்டையும் அலங்கரிக்கும் பொறுப்பை தனது தங்கை ஷகுனிடம் கொடுத்துள்ளார் டாப்ஸி.
இரண்டு வீடுகள் மட்டும் அல்ல சொந்தமாக ஒரு பி.எம்.டபுள்யூ காரும் வைத்துள்ளார். இந்நிலையில் தனது நடிப்பில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்காதது பற்றியும் டாப்ஸி விளக்கம் அளித்துள்ளார்.
பிங்க் படத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணாக நடித்தேன். அந்த கொடுமையை எல்லாம் மறுபடியும் அனுபவிக்க வேண்டாமே என்று தான் தல படத்தில் நடிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அஜித் சார் படத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்றார்.
கதாபாத்திரத்திற்காக மனதளவில் தயாராகுகிறேன். ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு 90 சதவீதம் அந்த கதாபாத்திர மனநிலையில் இருந்து வெளியே வந்துவிடுவேன். ஆனால் 10 சதவீதம் அப்படியே உள்ளது என்று தெரிவித்துள்ளார் டாப்ஸி.
டாப்ஸி ஏற்கும் கதாபாத்திரங்களில் சும்மா நடித்துவிட முடியாது. அந்த கதாபாத்திரத்தின் மனநிலைக்கு தன்னைத் தானே தயார் செய்த பிறகே நடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











