அந்தப் படத்துலலாம் நடிக்க நேரமே இல்லைங்க... டாப்ஸி எஸ்கேப்
சென்னை: யு டர்ன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க நேரமில்லி என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தமிழில், ஆடுகளம், காஞ்சனா 2, ஆரம்பம் உட்பட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. தெலுங்கிலும் நடித்து வந்த அவர், இப்போது இந்தி படங்களில் பிசி. அவர் நடித்த பிங்க், நாம் ஷபானா, ஜூத்வா 2 உட்பட சில படங்கள் அவரை கவனிக்க வைத்தன.

இதையடுத்து சுமார் அரைடஜன் இந்திப் படங்களில் நடித்துவரும் அவர், நிற்க நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறார்.
இவர் இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதையில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படம், யு டர்ன். ஸ்ரத்தா ஶ்ரீநாத், ராதிகா சேத்தன் உட்பட பலர் நடித்திருந்த இதை பவன்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கில் இது ரீமேக் செய்யப்பட்டது.
சமந்தாவுடன் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா உட்பட சிலர் நடித்திருந்தனர். கன்னடத்தில் இயக்கிய பவன் குமாரே, இந்த படத்தையும் இயக்கி இருந்தார்.
இது இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் டாப்ஸி நடிப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, மறுத்தார். தனக்கு நேரமில்லாததால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











