வருவாரா தபு?

மலையாளத்தில் ஹிட் ஆன கத பறயும்போல் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை பி.வாசு இயக்கவுள்ளார்.
இப்படத்தில் இரண்டு ஹீரோக்கள். ரஜினி, நடிகராக இப்படத்தில் நடிக்கிறார். 2வது நாயகனாக பசுபதி நடிக்கவுள்ளார். அதேபோல தெலுங்குப் பதில் 2வது நாயகனாக ஜெகபதி பாபு நடிப்பார் எனத் தெரிகிறது.
கிராமத்து சவரத் தொழிலாளி வேடத்தில் பசுபதியும், ஜெகபதி பாபுவும் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில் ரஜினியை ஜெகபதிபாபு சந்தித்து இதுதொடர்பாக பேசினாராம். அப்போதுதான் ஜெகபதி பாபு நடிப்பது குறித்து உறுதியானதாம்.
இதற்கிடையே, தமிழில் பசுபதிக்கு ஜோடியாக முதலில் சிம்ரனைப் போட வாசு தீர்மானித்திருந்தாராம். ஆனால் சிம்ரன் டிவி சீரியலில் நடிக்கக் கிளம்பி விட்டதாலும், கூடுதல் சம்பளம் கேட்டதாலும் அவரை நிராகரித்து விட்டார்களாம். அவருக்குப் பதில் தற்போது தபுவை அணுகியுள்ளனராம்.
தபு தமிழில் இதுவரை காதல் தேசம் மற்றும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். மூன்றாவது முறையாக, பசுபதிக்கு ஜோடியாக நடிக்க அவர் முன்வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











