மறுபடியும் 'அந்த' கேள்வியை தான் கேட்கப் போறீங்களா?: நடிகை எரிச்சல்
மும்பை: ஒரேயொரு கேள்வியை திருப்பித் திருப்பி கேட்பதால் நடிகை தபு கடுப்பாகியுள்ளார்.
இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருபவர் தபு. அவர் தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கோல்மால் அகெய்ன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது தபு கூறியதாவது,

திருமணம்
சல்மான் கானிடம் கேட்பது போன்று உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்கப் போகிறீர்களா?. இந்த கேள்வியை கேட்டு கேட்டு எரிச்சலாகிவிட்டது.

நண்பர்கள்
நானும், அஜய் தேவ்கனும் நல்ல நண்பர்கள். என் முதல் படமான விஜய்பாத்தில் அஜய் தேவ்கனுடன் சேர்ந்து நடித்தேன். அதில் இருந்து நாங்கள் நண்பர்களாக உள்ளோம்.

படங்கள்
நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இருந்தும் இது உங்களின் கம்பேக் படமா என்று 25 வருஷமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பால்கி
சீனி கம் எனக்கு ஸ்பெஷலான படம். இந்த படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பால்கிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











