கரீனா கபூர் மகனின் ஆயாவுக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?: ஷாக் ஆகிடுவீங்க
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மகனின் ஆயாவுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் என்று தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்.
பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மகன் தைமூர் அலி கானுக்கு 2 வயதாகிறது. தைமூர் பிறந்ததில் இருந்தே பிரபலமாக உள்ளார். தைமூர் செல்லும் இடம் எல்லாம் மீடியாவின் கவனம் செல்கிறது.
அந்த குட்டிப் பையனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலமுறை வைரலாகியுள்ளது.

தைமூர்
தைமூர் மட்டும் அல்ல அவரை கவனித்துக் கொள்ளும் ஆயாவும் (nanny) பிரபலமாக உள்ளார். தைமூர் இருக்கும் பெரும்பாலான புகைப்படங்களில் அந்த ஆயா தான் உள்ளார். தைமூரின் ஆயா பெரிய பிரபலமாகிவிட்டார் என்று நடிகர் ரிஷி கபூர் கூட ஒரு முறை கிண்டல் செய்தார். அந்த பிரபலமான ஆயாவின் சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.

கரீனா
தைமூரை கவனித்துக் கொள்ள அந்த ஆயாவுக்கு மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். அவர் ஓவர் டைம் செய்தால் மாதம் ரூ. 1.75 லட்சம் வரை சம்பளம் கொடுக்கிறார்களாம். இது தவிர தைமூரை பந்த்ரா பகுதிக்கு அழைத்துச் சென்று வருவதற்காக ஆயாவுக்காக தனியாக சொகுசு கார் ஒன்றையும் கொடுத்துள்ளாராம் கரீனா.

ஏஜென்சி
மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஏஜென்சி மூலம் அந்த ஆயாவை வேலைக்கு சேர்த்துள்ளார் கரீனா. அந்த ஏஜென்சியில் இருந்து தான் பெரிய, பெரிய ஆட்களின் குழந்தைகளை கவனிக்க ஆயாக்களை அனுப்புகிறார்களாம். நடிகர் துஷார் கபூர், கரீனாவின் நாத்தனாரும் நடிகையுமான சோஹா அலி கானும் அந்த ஏஜென்சி மூலம் தான் தங்களின் குழந்தைகளுக்கு ஆயாவை பணியமர்த்தியுள்ளனர்.

பணம்
தைமூரின் ஆயா தனது பணி நேரத்தை விட கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டுமாம். தைமூர் கரீனாவுடன் இருப்பதை விட ஆயாவுடன் இருக்கும் நேரமே அதிகம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை கரீனா மறுத்துள்ளார். என் மகனுடன் நான் எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்பது எனக்கு தெரியும் என்கிறார் கரீனா.

ஆப்ராம்
தைமூர் பிறப்பதற்கு முன்பு வரை பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் பின்னால் தான் மீடியா சென்றது. தைமூர் பிறந்ததில் இருந்து ஆப்ராமை மீடியா கண்டுகொள்ளவில்லை. பாலிவுட்டின் பிரபலமான வாரிசு என்றால் அது தைமூர் அலி கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











