Aarti Ravi: உன் பசங்கள பாத்துக்கோனு சொல்லி அணைத்து முத்தம் கொடுத்த ராதிகா.. கண் கலங்கிய ஆர்த்தி ரவி
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக கடந்த 2024ஆம் ஆண்டே தெரிவித்து விவாகரத்துக்கும் விண்ணப்பித்து, வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இப்படி இருக்கையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே ரவி மோகன் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்ததில் இருந்து ஆர்த்தி உடன் தான் இருக்கிறார்கள். ஆனாலும், அவ்வப்போது ரவி மோகன் அவர்கள் இருவரையும் வெளியே அழைத்துச் செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது எனவும் இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ராதிகாவின் தாய் கிழவி படத்தின் செலிபிரிட்டி ஷோ பார்க்க வந்த ஆர்த்தி ரவியை பார்த்ததும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நடிகை ராதிகா, உனது இரண்டு மகன்களையும் பார்த்துக் கொள் என்று அறிவுரை கூறினார். அவர் அப்படிச் சொன்னதுமே ஆர்த்தி ரவி கண் கலங்க, ஆர்த்தி ரவியை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.
ரவி மோகன் - ஆர்த்தி ரவி காதலித்து திருமணம் செய்தவர்கள். கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆரவ் ரவி மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். ரவி மோகன் ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்த பின்னர் அவர்கள் இருவரும் ஆர்த்தி உடன் தான் இருக்கிறார்கள். ஆர்த்தி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அவர்களின் அப்போதைய நடவடிக்கைகள் எதையாவது குறிப்பிடுவார்.

ஆதரவு: ரவி மோகன் விவாகரத்தை அறிவித்ததும், நடிகை ராதிகா, குஷ்பு, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகைகள் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார்கள். அடிக்கடி சில கெட்டூ கெதர் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இது மட்டும் இல்லாமல், ஆர்த்தி ரவிக்கோ, அவரது தாயார் சுஜாதா விஜயகுமாருக்கோ பிறந்த நாள் என்றால் படையாக திரண்டு சென்று வாழ்த்துகிறார்கள்.
தாய் கிழவி: இப்படி இருக்கையில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடித்துள்ள தாய் கிழவி படம் பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் செலிபிரிட்டி ஷோ சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதைப் பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இந்நிலையில் தாய் கிழவி படத்தின் செலிபிரிட்டி ஷோ பார்க்க வந்த ஆர்த்தி ரவியை பார்த்ததும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நடிகை ராதிகா,"நீயும் கவனமாக இரு, உனது இரண்டு மகன்களையும் பார்த்துக் கொள்" என்று அறிவுரை கூறினார். அவர் அப்படிச் சொன்னதுமே ஆர்த்தி ரவி கண் கலங்க, ஆர்த்தி ரவியை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











