'கோலி'யை அமுக்கிட்டாராமே தமன்னா.. நெசமா?

By Shankar

ஒரு காதல் கிசுகிசுவால் கோடம்பாக்கத்தை விட்டே கொஞ்ச நாளைக்கு விலகியிருந்த தமன்னா, மீண்டும் ஒரு காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.

முன்பு வந்தது சக நடிகருடனான காதல் கிசுகிசு. இப்போது வந்திருப்பது பிரபல விளையாட்டு வீரர் விராத் கோலியுடன்.

இந்தியில்...

இந்தியில்...

தமிழில் நடிக்க முடியாத சூழலில், தெலுங்கில் பிஸியாக இருந்த தமன்னா, பின்னர் அப்படியே இந்திக்கும் போனார். முதல் படம் ‘ஹிம்மத்வாலா' சமீபத்தில் வெளியாகி படுத்துவிட்டது. ஆனாலும் தமன்னாவின் தாராளக் கவர்ச்சி அவருக்கு இன்னும் சில பட வாய்ப்புகளை பாலிவுட்டில் பெற்றுத் தந்ததுள்ளது

இட்ஸ் என்டர்டெயின்மென்ட்

இட்ஸ் என்டர்டெயின்மென்ட்

தற்போது தமிழில் ‘வீரம்' படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். ‘இட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்' என்ற இந்தி படத்திலும் ‘ஏகடு' என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விளம்பரப் படத்தில்

விளம்பரப் படத்தில்

இந்த நிலையில் விராத் கோலியுடன் விளம்பர படமொன்றில் சேர்ந்து நடித்தார் தமன்னா. அப்போது இந்த சிவப்பழகியிடம் மீள முடியாத அளவுக்கு சிக்கிவிட்டாராம் கோலி. இருவரும் இப்போது இணைபிரியாத காதலர்களாக வலம் வருகிறார்களாம்.

விராத் கோலிக்கு இது சகஜம்

விராத் கோலிக்கு இது சகஜம்

இந்த மாதிரி கிசுகிசுக்களில் சிக்குவது கோலிக்கு புதிதல்ல. ஏற்கனவே பல இந்தி நடிகைகளை தன் வலையில் விழ வைத்தவர் அவர். ஆனால் இப்போது தமன்னா வலையில் வசமாக சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பதில் சொல்ல மறுப்பு

பதில் சொல்ல மறுப்பு

இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது, இதுகுறித்து எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X