இந்தியில் ஒரு படமும் ஓடலை.. மீண்டும் தமிழ், தெலுங்குக்குத் திரும்பிய தமன்னா!
இந்தியில் தான் நடித்த இரண்டாவது படமும் பெரும் தோல்வியைத் தழுவியதால், பாலிவுட் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு தென்னகத்துக்கே திரும்பினார் தமன்னா.
தமன்னாவின் திரைப்பயணம் தமிழில்தான் ஆரம்பமானது. அவரது முதல் படம் கேடி கைகொடுக்காததால், தெலுங்குக்குப் போனார். பின்னர் கல்லூரி படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார். அஜீத், விஜய், சூர்யா என பலருடனும் நடித்தார்.

காதல் சர்ச்சை
தமிழில் உச்சத்திலிருந்த தமன்னா காதல் சர்ச்சையில் சிக்கினார். இதன் விளைவு அவரால் தமிழில் தொடர்ந்து படங்கள் பண்ண முடியவில்லை. தெலுங்கிலேயே முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்தியில்
இந்த நேரம் பார்த்து அவருக்கு ஒரு இந்திப் பட வாய்ப்பு வந்தது. படத்துக்குப் பெயர் ஹிம்மத்வாலா. ஷாஜித் நாடியாவாலா இயக்கிய இந்தப் படம் படு தோல்வி கண்டது. இருந்தாலும் மேலும் இரு படங்கள் அவருக்கு கிடைத்தன.

வீரம்
தமிழில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வீரம் படத்தில் நடித்தார் தமன்னா. அஜீத்துக்கு ஜோடியாக நடித்த அந்தப் படம் ஓரளவு நன்றாக ஓடியது. இதைத் தொடர்ந்து தமிழில் அவரை இன்னும் இரு பெரிய படங்களில் ஒப்பந்தம் செய்தனர்.

மேலும் ஒரு படமும் தோல்வி..
தமிழ், தெலுங்கில் தொடர்ந்து அவர் நடித்தாலும், இந்தியில் தனது அடுத்த படமாவது ஹிட்டாகும் என நம்பினார். ஆனால் அடுத்த வந்த ஹம்ஷகல்ஸ் அந்த நம்பிக்கையில் ஒரு கூடை மண்ணை அள்ளிப்போட்டது. இந்தப் படமும் அவுட்.

ராசியில்லா நடிகை
இதனால் ராசியில்லா நடிகை முத்திரை சுலபத்தில் விழுந்துவிட்டது தமன்னா மீது. இந்தியில் இன்னும் அவர் நடித்து வெளியாக வேண்டிய படம் இட்ஸ் என்டர்டெயின்மென்ட். அக்ஷய் குமார் ஜோடி.

தமிழ், தெலுங்கே போதும்..
இந்தியில் நிலைமை இப்படி இருந்தாலும், தமிழ்-தெலுங்கில் தமன்னாவின் மவுசு குறையவில்லை. அவரது கால்ஷீட்டுக்காக இயக்கநர்கள், தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். எனவே தமிழ், தெலுங்குக்கே இனி முன்னுரிமை என்ற முடிவுக்கு வந்துள்ளார் தமன்னா.


Click it and Unblock the Notifications











