என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? தமன்னாவிடம் கேட்ட 5 துணை இயக்குனர்கள்
மும்பை: ஹிம்மத்வாலா இந்தி பட ஷூட்டிங்கின்போது தமன்னாவை திருமணம் செய்து கொள்ள 5 துணை இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமன்னா ஹிம்மத்வாலா என்னும் இந்தி படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த தமன்னாவை 5 துணை இயக்குனர்கள் தனித் தனியாக சந்தித்து தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். இதை கேட்ட தமன்னா இது என்னடா வம்மா போச்சு என்று நினைத்துள்ளார்.
அதன் பிறகு தான் தெரிய வந்தது இது இயக்குனர் சஜித் கானின் குசும்பு என்று. சும்மா விளையாட்டாக அவர் இப்படி செய்துள்ளார்.

புரபோஸ் பண்ண துணை இயக்குனர்கள்
முதல் இரண்டு துணை இயக்குனர்கள் தங்களை மணந்து கொள்ளுமாறு கேட்டபோது தமன்னா அதை பெரிதுபடுத்தவில்லை.

யாரோ விளையாடுகிறார்கள்
அடுத்த 3 பேர் வந்து புரபோஸ் செய்தவுடன் அவர்கள் விளையாட்டாக செய்கிறார்கள் என்பதை தமன்னா தெரிந்து கொண்டார். படப்பிடிப்பில் ரிலாக்ஸாக இருக்க அவ்வாறு செய்தார்கள் என்பதை புரிந்து கொண்டார்.

ஸ்ரீதேவி நடித்த ஹிம்மத்வாலா ரீமேக்
அஜய் தேவ்கன், தமன்னா நடித்துள்ள ஹிம்மத்வாலா கடந்த 1983ம் ஆண்டில் ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஹிம்மத்வாலாவின் ரீமேக்.

இந்தியில் 2வது படம்
ஹிம்மத்வாலா தமன்னா நடிக்கும் 2வது இந்தி படம். அவர் 2005ல் சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











