எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் 'அந்த காட்சி' மட்டும் முடியவே முடியாது.. தமன்னா அதிரடி!
மும்பை: எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் முத்தக்காட்சியில் மட்டும் நடிக்கவே முடியாது என நடிகை தமன்னா அதிரடியாக கூறியுள்ளார்.
நடிகை தமன்னா தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.

கவர்ச்சியில் தாராளம்
தற்போதும் தமிழ், இந்தி, தெலுங்கு என படு பஸியாக உள்ளார். தமன்னா நடிக்க வந்ததிலிருந்தே ஓவர் கவர்ச்சி காட்டி வருகிறார். சம்பளத்திற்கு ஏற்ப கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் தமன்னா.

கூடுதல் சம்பளம்
இந்நிலையில் லிப் லாக் காட்சியில் நடிக்கக்கோரி தயாரிப்பாளர்கள் தமன்னாவை அணுகி வருகின்றனராம். அதற்காக கூடுதல் சம்பளம் தருகின்றோம் என்று கூறியும் ஆசைக்காட்டுகின்றனராம்.

முடியவே முடியாது
ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் மசிய வில்லையாம் தமன்னா. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என கட் அன்ட் ரைட்டாக கூறிவிட்டார் தமன்னா.

ரசிகர்கள் மகிழ்ச்சி
பல ஹீரோயின்கள், சம்பளமும் வாய்ப்பும் கொடுத்தால் போதும் லிப் லாக், படுக்கையறை மற்றும் நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்ற நிலையில் உள்ளனர். ஆனால் தமன்னா லிப் லாக் காட்சியில் கூட நடிக்க மறுத்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமன்னா டாப்லெஸ்
ஏற்கனவே பாகுபலி படத்தில் நடிகை தமன்னா டாப்லெஸாக நடித்திருந்தார். இதற்காக அவரை ரசிகர்கள் கண்டமேனிக்கு வறுத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











