தமன்னாவுக்கும், பாலிவுட்டுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளதே?
மும்பை: தமன்னாவுக்கும், பாலிவுட்டுக்கும் ராசியே இல்லாதது போன்று உள்ளது.
பாலிவுட்டில் அறிமுகமான தமன்னா அங்கு வாய்ப்பு எதுவும் இல்லாததால் டோலிவுட் மற்றும் கோலிவுட்டை தேடி வந்தார். ஆந்திரா மற்றும் தமிழகத்தில் முன்னணி நாயகியாக இருந்து வந்த அவரது மார்க்கெட் சற்று டல்லடித்தது.
இந்நிலையில் அவர் பாலிவுட் பக்கம் சென்றார்.

ஹிம்மத்வாலா
1983ம் ஆண்டில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ஹிம்மத்வாலாவை இயக்குனர் சாஜித் கான் அஜய் தேவ்கன் மற்றும் தமன்னாவை வைத்து ரீமேக் செய்தார். படம் பப்படமானது.

மீண்டும் சாஜித்
ஹிம்மத்வாலா பிளாப் ஆன போதிலும் சாஜித் சற்றும் மனம் தளராமல் ஹம்ஷகல்ஸ் படத்தை இயக்கினார். சயிப் அலி கான், ராம் கபூர், ரிதேஷ் தேஷ்முக் அதாங்க ஜெனிலியாவின் கணவர் நடித்த இந்த படத்தில் மூன்றில் ஒரு நாயகியாக தமன்னா நடித்தார்.

விமர்சனம்
ஹம்ஷகல்ஸ் படத்தை பார்த்த விமர்சகர்கள் அதை காரித் காரித் துப்புகிறார்கள். ஆனால் ரசிகர்களோ தியேட்டரில் அடித்துப் பிடித்து படத்தை பார்த்து அதன் வசூலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தமன்னா
ஹிம்மத்வாலா தான் புஸ்ஸானது ஹம்ஷகல்ஸாவது நமக்கு உதவும் என்று தமன்னா நம்பியது தவறாகிவிட்டது. பாவம் படத்தில் அவர் நடிப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை.

சம்பளம்
பாலிவுட்டில் தனக்கு மவுசு இல்லை என்பதால் தமன்னா தனது சம்பளத்தை குறைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











