இவ்வளவு லேட்டாவா ரிப்ளை தருவீங்க.. நீங்க என்ன அவ்வளவு பிஸியா ?

சென்னை : பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய காஜலுக்கு லேட்டாக ரிப்ளை அளித்துள்ளார் தமன்னா. இவ்வளவு லேட்டா ரிப்ளை தரீங்களே நீங்க என்ன அவ்வளவு பிஸியா என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள். அதை தாண்டி சிறந்த நண்பர்கள். 80களில் அம்பிகா ராதா எப்படியோ அப்படி தான் இவர்கள். இருவரும் பிஸியாக நடித்து வந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் சந்தித்து ஒன்றாக நேரத்தை இவர்கள் செலவிடுவது வழக்கம்

tamanna delayed reply

நடிகை காஜல் அகர்வால் தனது விடுமுறைக்காக தற்போது மாலதீவில் இருக்கிறார். அதனால் இந்தியா வர முடியாத காஜல் தனது தோழிக்கு கடந்த டிசம்பர் 21 ட்விட்டர் மூலம் தங்கள் இருவரின் புகைப்படத்தை பதிவேற்றி வாழ்த்து கூறி இருந்தார்.

ஆனால் தமன்னா ஒரு வாரம் கழித்து தற்போது தான் அந்த ட்விட்டை பார்த்து நன்றி காஜு என கூறி முத்தமிட்டுருக்கிறார். தமன்னா தனது தோழிக்கு ஏன் இவ்வளவு தாமதமாக ரிப்ளை செய்து இருக்கிறார். தமன்னா அவ்வளவு பிஸியாகி விட்டாரா என்று ரசிகர்கள் ட்விட்டரிலே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

tamanna delayed reply

தமன்னா கடைசியாக தமிழில் விஷாலுடன் ஆக்சன் படத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தில் கிளாமர் கதாபாத்திரமாக இல்லாமல் ஆக்சன் நாயகியாக நடித்து இருந்தார் நடிகை தமன்னா. அந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளில் குறிப்பாக பைக் சேசிங்க் காட்சி மிரட்டும் வகையில் இருந்தது அந்த காட்சியில் மிகவும் அருமையாக நடித்து இருப்பார். மேலும் இவரை பாகுபலி படத்தில் கையில் வாளுடன் தான் நாம் பார்த்து இருக்கிறோம், ஆனால் ஆக்சன் படத்தில் இவர் வேறு ஒரு தமன்னாவாக நடித்து இருந்தார்.

தற்போது ஹிந்தி,தமிழ் மற்றும் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிக்க போகும் படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. தெலுங்கில் சரிலேரு நீக்கேவாரு, கோபிசந்த் 28 மற்றும் தெட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தமன்னா . ஹிந்தியில் போலே சௌதியான் என்ற படத்தில் நடித்து வருகிறார் .

tamanna delayed reply

மறுபுறம் கோமாளி பட வெற்றிக்கு பிறகு சிறிய இடைவேளை விட்டு இருக்கும் காஜல், தமிழில் பேரீஸ் பேரீஸ் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார் . தெலுங்கில் மொசகல்லு படத்தில் நடிக்க உள்ளார் மற்றும் ஹிந்தியில் மும்பை சாகா படத்தில் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Read more about: tamanna தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X