»   »  இதுவரை யாரையும் லவ் பண்ணலை... சொல்கிறார் தமன்னா

இதுவரை யாரையும் லவ் பண்ணலை... சொல்கிறார் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி இயக்குநர் சாஜித் கானின் அடுத்தடுத்த 2 படங்களில் நடித்த தமன்னா இயக்குனரை ரகசியமாக சந்தித்து, காதல் வளர்த்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

மேலும் தமன்னா-சாஜித் கான் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

சமீபத்தில் இந்தக் காதல் விவகாரங்கள் குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார்.

தமன்னா

தமன்னா

அறிமுகம் இந்தி என்றாலும் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் தமன்னா. கடந்த வருடம் வெளியான பாகுபலி படம் தமன்னாவின் மதிப்பை மேலும் அதிகப்படுத்தி இருகிறது.

2 படங்களில்

2 படங்களில்

இந்நிலையில் 8 வருடம் கழித்து 2013 ல் இயக்குநர் சாஜித் கானின் ஹிம்மத்வாலா படத்தில் நடித்து மீண்டும் இந்திப் படங்களின் பக்கம் தமன்னா தனது பார்வையைத் திருப்பினார். ஹிம்மத்வாலா சொதப்பினாலும் அடுத்த ஆண்டு மீண்டும் தனது ஹம்சக்கல்ஸ் படத்தில் சாஜித் கான் தமன்னாவை நடிக்க வைத்தார்.

திருமண வதந்தி

திருமண வதந்தி

இந்நிலையில் இயக்குநர் சாஜித் கானை தமன்னா ரகசியமாக சந்தித்து காதல் வளர்த்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

நட்பாக பழகினோம்

நட்பாக பழகினோம்

நடிகை தமன்னா தற்போது இந்த காதல் வதந்திகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது "டைரக்டர் சாஜித்கானும் நானும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. அவர் இயக்கிய ஹிம்மத்வாலா படத்தில் நான் நடித்தேன். அந்த படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது. அதன்பிறகும் என்னை ஒதுக்காமல் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். இது அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. இருவரும் நட்பாக பழகினோம்.

என்னை நன்றாக

என்னை நன்றாக

படப்பிடிப்பில் சாஜித் கான் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்.இதை வைத்துத்தான் இப்படி தவறான தகவல் பரவி இருக்கிறது. எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. வதந்திகளும், கிசுகிசுக்களும் மக்களை விரைவில் சென்று அடைந்து விடுகிறது. அப்படித்தான் இந்த காதல் வதந்தியும் பரவி இருக்கிறது. இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை.

ராஜமௌலி

ராஜமௌலி

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்புகிறேன். பாகுபலி என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படம். அந்த படத்தில் வாய்ப்பு தந்த டைரக்டர் ராஜமவுலி எனக்கு கடவுளாக தெரிகிறார். இந்தியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அங்கேயும் சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க ஆசை இருக்கிறது.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

எப்படித்தான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல கதை, நேரம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. ஆனாலும் அதிர்ஷ்டம் இருந்ததால் உயர்ந்தேன்". என்று தனது காதல் குறித்த வதந்திகளுக்கு தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார்.

பாகுபலி 2

பாகுபலி 2

தமன்னாவின் கைவசம் ராஜமௌலியின் பாகுபலி 2, விஜய் சேதுபதியின் தர்மதுரை, இயக்குநர் விஜய்யின் அடுத்த படம் மற்றும் ஜீவாவின் பெயரிடப்படாத படங்கள் ஆகியவை உள்ளன.

English summary
In Recent Interview Tamanna Explain about her Love Rumors. She Says "There is no love Between me and Sajid Khan. I don't love Anyone".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil