Tamanna Kiss: இயக்குநர் அல்வா கொடுத்தார், நான் முத்தம் கொடுத்தேன்: தமன்னா கலகல

By Siva

Recommended Video

சீனு ராமசாமி எனக்கு அல்வா கொடுத்தார், நான் அவருக்கு முத்தம் கொடுத்தேன் -வீடியோ

சென்னை: சீனு ராமசாமி எனக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்தார், நான் அவருக்கு முத்தம் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து தமன்னா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

கண்ணே கலைமானே

கண்ணே கலைமானே

கண்ணே கலைமானே காதல் கதை கொண்ட படம். நான் வங்கி அதிகாரியாக நடித்துள்ளேன். ஹீரோ உதயநிதிக்கு இணையான கதாபாத்திரம் என்னுடையது. படம் அருமையாக வந்துள்ளது.

பாராட்டு

பாராட்டு

முழு படத்தையும் பார்த்து அழுதுவிட்டேன். நான் நன்றாக நடித்துள்ளதாக சீனுராமசாமி என்னை பாராட்டினார். என் நடிப்பை பாராட்டி அவர் திருநெல்வேலி அல்வா கொடுத்தார். அந்த அல்வா எனக்கு மிகப் பெரிய பரிசாக இருந்தது.

தமன்னா

தமன்னா

சீனுராமசாமியின் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். தர்மதுரை படத்தை போன்றே இந்த படத்திலும் எனக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. படம் சிறப்பாக வந்துள்ளதால் நான் சீனுராமசாமிக்கு முத்தம் கொடுத்தேன்.

திருமணம்

திருமணம்

படத்தில் கவர்ச்சி உண்டு. ஆனால் அது உடல் கவர்ச்சி அல்ல. முகத்தில் தான் கவர்ச்சியை பார்ப்பீர்கள். நான் நன்றாக தமிழ் பேசுவதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். நானும் தமிழ் பெண்ணே. தமிழகத்தில் நல்ல பையன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X