மும்பை போனாலும் தமன்னாதான் எனக்கு பிரியமான தோழி... இலியானா

By Mayura Akilan

மும்பையில் செட்டில் ஆனாலும் தமன்னாதான் எனக்கு பிரியமான பிடித்த தோழி என்று கூறியுள்ளார் நடிகை இலியானா. இலியானா நடித்த பார்பி படம் ஹிட் ஆன உடன் மும்பையிலே செட்டில் ஆகிவிட்டார் இலியானா.

அவ்வப்போது அத்திப்பூத்தார் போல ஆந்திரா பக்கம் எட்டிப்பார்க்கிறார். தமிழில் 'கேடி' படத்தில் ரவி கிருஷ்ணா உடன் தமன்னாவும் இலியானவும் இணைந்து நடித்தனர் அப்போதிருந்தே இருவரும் உயிர்தோழிகளாக மாறிவிட்டனராம். இதனை இலியானவே கூறியுள்ளார்.

பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்தாலும் சமீபத்தில் ஐதராபாத் வந்த இலியானா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தான் மும்பையில் இருந்தாலும் மனமெல்லாம் தென் மாநிலங்களில்தான் இருக்கிறது என்றார்.

நான் பார்ட்டிக்கு போகமாட்டேன்

நான் பார்ட்டிக்கு போகமாட்டேன்

மும்பையில் இருந்தாலும் நான் பார்ட்டிக்கு போனதில்லை. பெரும்பாலும் அதனை தவிர்த்து விடுவேன். வீட்டில்தான் பொழுதை கழிப்பேன் என்று கூறியுள்ளார் இலியானா.

 என்னுயிர் தோழி தமன்னா

என்னுயிர் தோழி தமன்னா

எனக்கு தென் மாநிலங்களில் நட்சத்திர நண்பர்கள் அதிகம். என் உயிர் தோழி தமன்னாதான். அவரும் இப்போது பாலிவுட் வரப்போவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழில் இரண்டு படம்

தமிழில் இரண்டு படம்

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியான தமிழில் கேடி, நண்பன் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் இந்தியில் பர்பி படத்தின் மூலம் முன்னணி நடிகையாக பாலிவுட்டில் உயர்ந்துவிட்டார்.

இந்தியில் குவியும் வாய்ப்பு

இந்தியில் குவியும் வாய்ப்பு

பர்பி வெற்றியினால் இலியானாவிற்கு இந்தியில் வாய்ப்பு குவிகிறதாம். இதனால் தென்னிந்திய திரைப்படங்களில் பக்கம் இப்போதைக்கு திரும்ப மாட்டார் என்றே கூறப்படுகிறது.

இலியானா, தமன்னா போயிட்டா

இலியானா, தமன்னா போயிட்டா

ஒல்லிக்குச்சி நடிகைகளான இலியானா, தமன்னா எல்லாம் பாலிவுட் பக்கம் போயிட்டா கொழுக் மொழுக் ஹன்சிகா போன்ற நடிகைகள் தமிழ்நாட்டு ரசிகர்களை வாழ வைப்பார்கள் என்று நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X