கன்னட படத்தில் நடிக்க தமன்னா போட்ட ஒரேயொரு கன்டிஷன்
Recommended Video

தமன்னா போட்ட ஒரேயொரு கன்டிஷன்!- வீடியோ
பெங்களூர்: கன்னட படங்களில் நடிக்க தமன்னா ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி மொழி படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது சாண்டல்வுட் பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமாருடன் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளனர். கன்னட படங்களில் நடிப்பீர்களா என்று தமன்னாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு தமன்னா கூறியதாவது,
நான் கன்னட படத்தில் நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் அந்த படத்தின் ஹீரோ புனித் ராஜ்குமாராக இருக்க வேண்டும் என்றார். தமன்னா கூறியதை கேட்ட புனித் கன்னட திரையுலகிற்கு வருமாறு தமன்னாவிடம் கூறினார்.
விரைவில் இருவரும் சேர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











