ஏவி.எம். படத்தில் தமன்னா

By Staff

Tamanna
சிவாஜியைத் தொடர்ந்து ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

சிவாஜி என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த ஏவி.எம். நிறுவனம் அடுத்த படத்தைத் தொடங்கவுள்ளது. இதில் சூர்யா நடிக்கிறார். பேரழகன் படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் 2வது ஏவி.எம். படம் இது.

இப்படத்தை கேமராமேன் கே.வி. ஆனந்த் இயக்குகிறார். கனா கண்டேன் படத்துக்குப் பின்னர் ஆனந்த் இயக்கவுள்ள 2வது படம் இது.

இப்படத்தில் சூர்யாவுக்கான ஜோடி முடிவாகாமல் இருந்தது. தற்போது தமன்னாவை புக் செய்துள்ளனராம். ஏற்கனவே தமன்னாவை புக் செய்து விட்டனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக தற்போதுதான் அறிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் இயக்குநர் ஷங்கர். அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள கல்லூரி படத்தில் தமன்னாதான் நாயகி. இப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று தமன்னாவுக்கு ஏற்கனவே கண்டிஷன் போட்டிருந்தாராம் ஷங்கர்.

இதன் காரணமாக தமன்னாவால் வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாத நிலை இருந்தது. தற்போது கல்லூரி முடிந்து விட்டதால், ஷங்கரின் ஒப்புதலுடன் ஏவி.எம். படத்தில் புக் ஆகியுள்ளார்.

கேடி படம்தான் தமன்னாவுக்கு தமிழில் முதல் படம். அதன் பின்னர் அவருக்கு நல்ல பட வாய்ப்புகள் அமையவில்லை. வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தார். அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்த தமன்னாவின் நடிப்புத் தேடலுக்கு சரியான வடிகாலாக அமைந்துள்ளது கல்லூரி.

இப்படத்தில் தமன்னா படு அழகாக நடித்துள்ளாராம். கல்லூரி, தமன்னாவின் முதல் படம் போல இருக்கும் என்றும் கல்லூரி யூனிட் பெருமையாக கூறுகிறது. கல்லூரி நாளை திரைக்கு வருகிறது என்பது நினைவிருக்கலாம்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் நடித்து வரும் தமன்னா, லேட்டஸ்டாக நடித்து வெளியாகியுள்ள ஹேப்பி டேஸ், அங்கு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஏவி.எம் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து தமன்னா கூறுகையில், இது எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. எனது கணவு ஹீரோ சூர்யா. அதேபோல மிகப் பெரிய வரலாறு கொண்ட நிறுவனம் ஏவி.எம். இருவருடனும் ஒரே படத்தில் இணைவது என்பது மிகப் பெரிய சந்தோஷம்.

வார்னர் பிரதர்ஸ் போல மிகப் பெரிய நிறுவனமான ஏவி.எம். படத்தில் நடிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உண்மையில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அதேபோல, நல்ல கிரியேட்டரான கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதும் பெருமையாக உள்ளது என்று சந்தோஷப்பட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X