எடுடா துடைப்பத்தை, அள்ளுடா குப்பையை: சுத்தமான இந்தியா சவாலை ஏற்ற தமன்னா
மும்பை: சுத்தமான இந்தியா சவாலை ஏற்று நடிகை தமன்னா மும்பை லோகந்த்வாலா பகுதியை சுத்தம் செய்துள்ளார்.
நம் நாட்டை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி சுத்தமான இந்தியா திட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் அவர் உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு சுத்தமான இந்தியா சவால் விடுத்தார். அவரது சவாலை கமல் தனது பிறந்தநாள் அன்று ஏற்றார்.
இந்நிலையில் சுத்தமான இந்தியா சவாலை சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் தேஜா ஏற்றார்.

தமன்னா
ராம் சரண் தேஜா தமன்னாவுக்கு சுத்தமான இந்தியா சவால் விடுத்தார்.

மும்பை
ராம் சரணின் சவாலை ஏற்று தமன்னா கையில் துடைப்பத்தை எடுத்து மும்பை லோகந்த்வாலா பகுதியை சுத்தம் செய்தார்.

ரசிகர்கள்
தமன்னா தெருவை சுத்தம் செய்வதை பார்த்த அவரது ரசிகர்களும் அவருடன் சேர்ந்து குப்பையை அள்ளினர்.
ஃபேஸ்புக்
தான் கையில் துடைப்பத்தை எடுத்து தெருவை சுத்தம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை தமன்னா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











