எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே
Recommended Video

சென்னை:நடிகை தமன்னாவின் நிலைமை இப்படி பரிதாபமாக ஆகிவிட்டது.
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தவர் தமன்னா. தற்போது அவரது மார்க்கெட் டல்லடித்துள்ளது. பாலிவுட் பக்கம் சென்றவரை ஆளாளுக்கு புகழந்தார்களே தவிர புதுப் பட வாய்ப்பு எதுவும் கொடுக்கவில்லை.
இதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா.

ஏமாற்றம்
படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட்டை பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் தூக்கி நிறுத்தும் என்று நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது போன்று எதுவுமே நடக்கவில்லை.

தமன்னா
தமன்னா தற்போது நிறைய படங்களில் நடிப்பது இல்லை. ஏன் என்று கேட்டால் நான் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் ஓய்வு தேவைப்படுகிறது என்கிறார்.

குறைப்பு
ஓய்வு தேவைப்படுவதால் படங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளேன். என்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்பது இல்லை என்று தெரிவித்துள்ளார் தமன்னா. பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதை இப்படி சமாளித்துள்ளார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

தமிழ்
தமன்னா ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தவிர சயீரா நரசிம்ம ரெட்டி, தட் இஸ் மகாலட்சுமி மற்றும் கண்ணே கலைமானே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











