முத்தக்காட்சியா... ம்ஹூம்... குடும்பத்தோட பார்க்கிறாங்கள்ல! - தமன்னா
தமன்னாவின் முதல் இந்திப் படம் ஹிம்மத்வாலா நேற்று வெளியானது. இதில் அஜய் தேவ்கனுடன் அவர் நடித்திருந்தார்.
இந்தப் படம் குறித்துப் பேச செய்தியாளர்களைச் சந்தித்தார் தமன்னா. அவர் கூறுகையில், "வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளேன்.
என் படங்களை குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். எனவே மோசமான காட்சிகளில் நடிக்க மாட்டேன். குடும்பத்தினர் ஒன்றாக உட்கார்ந்து படம் பார்ப்பது போன்ற கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனவே முத்தக்காட்சிகளில், படுக்கையறைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தமிழ், தெலுங்கில் இதுவரை அதுபோன்று நடிக்கவில்லை. தற்போது இந்திப் படங்களில் நடிப்பதால் அங்கு முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்கின்றனர். எந்த கட்டாயத்துக்கும் நான் வளைய மாட்டேன். இந்திப் படங்களிலும் முத்துக்காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன்.
ஹிம்மத்வாலா இந்திப் படத்தில் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்," என்றார்.
அந்த அனுபவத்தில்தான் இப்படி முடிவெடுத்தாரோ!


Click it and Unblock the Notifications












