தமன்னா வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தெறித்து ஓடும் தெலுங்கு ஹீரோக்கள்
ஹைதராபாத்: தமன்னாவுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்பதை நினைத்தாலே தெலுங்கு ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.
தமன்னா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் டான்ஸ் ஆடுவதில் வல்லவர். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். அவர் சோலோவாக ஆடும்போது பிரச்சனை இல்லை. ஆனால் டூயட் பாடல்களுக்கு ஆடுகையில் தெலுங்கு ஹீரோக்கள் அதிலும் சீனியர்களுக்கு மூச்சு முட்டுகிறதாம்.

தமன்னா வேகத்திற்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் ஹீரோக்கள் அல்லாடுகிறார்களாம். அனதால் டான்ஸ் மாஸ்டரை அழைத்து ஸ்டெப்ஸ் போடும்போது எங்களை மனதில் வைத்து சொல்லிக் கொடுங்கள். தமன்னாவை நினைத்து ஸ்டெப்ஸ் வேண்டாம், எங்களால் முடியவில்லை என்கிறார்களாம்.
ஹீரோக்கள் தனக்கு ஈடாக ஆட முடியாததால் தன்னால் தனது நடனத் திறமை முழுவதையும் வெளிப்படுத்த முடியவில்லை என்ற கவலை தமன்னாவுக்கு.
Comments


Click it and Unblock the Notifications