தமன்னாவுக்கு நஷ்டம், காஜல் அகர்வாலுக்கு லாபம்

By Siva

ஹைதராபாத்: தமன்னா வெளியேறியதை அடுத்து ராஜு காரி காதி 3 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஓம்கார் இயக்கும் ராஜு காரி காதி 3 படத்தில் நடிக்க 6 மாதங்களுக்கு முன்பே சம்மதம் தெரிவித்திருந்தார் தமன்னா. இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கிய பிறகு படத்தில் இருந்து விலகினார்.

Tamannas loss is Kajal Aggarwals gain

தன்னிடம் ஒரு கதையை கூறிவிட்டு வேறு கதையை படமாக்குவதாகக் கூறி அவர் படத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அந்த படத்தில் தமன்னாவுக்கு பதில் காஜல் அகர்வால் நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராஜு காரி காதி 3 படத்தில் இருந்து தமன்னா வெளியேறியது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,

படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் துவங்கியது. தமன்னா சந்தோஷமாக வந்து கலந்து கொண்டார். இந்நிலையில் அவருக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகே அவர் இந்தி படத்தில் கவனம் செலுத்த இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றார்.

பேட்ட படத்தின் வில்லன் நவாசுத்தீன் சித்திக்கி நடிக்கும் போலே சூடியான் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. அவருக்கு வெயிட்டான கதாபாத்திரமாம். இந்த படத்தில் நாகினி தொலைக்காட்சி தொடர் புகழ் மவுனி ராய் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு பதில் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

எப்பொழுது பார்த்தாலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து தமன்னாவுக்கு போர் அடித்துவிட்டதாம். இந்நிலையில் தான் வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்ததும் போலே சூடியான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தமன்னா மட்டும் அல்ல காஜல் அகர்வாலும் படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புகிறார். அதனால் தான் சீதா தெலுங்கு படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் காஜல். இந்நிலையில் அவர் ராஜு காரி காதி 3 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்றால் நிச்சயம் வெயிட்டான கதாபாத்திரமாகத் தான் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X