»   »  புலி படம்... தமன்னாவும், சமந்தாவும் என்ன சொல்றாங்க?

புலி படம்... தமன்னாவும், சமந்தாவும் என்ன சொல்றாங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்த புலி படத்தை சமூக வலைத் தளங்கள் இன்னும் விட்டுவிடத் தயாராக இல்லை. வெற்றிகரமான இரண்டாவது வாரமாக அந்தப் படத்தை வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைத் தளப் பயனாளர்கள்.

இன்னொரு பக்கம் அந்தப் படத்துக்கு ஆதரவாக நடிகர் நடிகைகள் கருத்து தெரிவிப்பதும் தொடர்கிறது.


இந்த வாரம் நடிகைகள் தமன்னா, சமந்தா இருவரும் புலி படம் பார்த்துள்ளனர்.


Tamanna, Samantha praised Puli

பார்த்தபிறகு அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் இவை:


பாகுபலி நாயகி தமன்னா:


புலி படத்தை பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. படத்தில் வரும் பிரம்மாண்ட காட்சிகளைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. இப்படி ஒரு படைப்பை கொடுத்த விஜய்க்கும் மற்றும் புலி படக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள்!


சமந்தா:


புலி படத்தை பார்க்கும்போது வேறொரு உலகத்தில் பயணிக்கும் அனுபவம் எனக்குக் கிடைத்தது. அந்தளவுக்கு கிராஃபிக்ஸ் மற்றும் பிரம்மாண்ட அரண்மனைகள் அமைந்தன. அதுமட்டுமின்றி இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் நிச்சயம் வரவேற்கப்படும்.

English summary
Actresses Tamanna and Samantha have praised Puli movie and its crew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil