»   »  குத்தாட்டம் போட தமன்னா, ஸ்ருதி, காஜல் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குத்தாட்டம் போட தமன்னா, ஸ்ருதி, காஜல் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.

குத்துப்பாட்டுக்கு ஆட தனியாக நடிகைகள் இருந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது எல்லாம் முன்னணி நடிகைகளே கை நிறைய பணம் கொடுத்தால் சந்தோஷமாக குத்தாட்டம் போடுகிறார்கள்.

அப்படி டோலிவுட்டில் குத்தாட்டம் போட முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமன்னா

தமன்னா

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா ஹீரோவாக நடித்த ஜாக்குவார் படத்தில் குத்தாட்டம் போட தமன்னா ரூ. 75 லட்சம் வாங்கியுள்ளார். மேலும் அல்லுடு சீனு மற்றும் ஸ்பீடுன்னோடு படங்களில் குத்தாட்டம் ரூ. 1 கோடி வாங்கியுள்ளார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ஜனதா கராஜ் படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட காஜல் அகர்வால் ரூ. 50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

மகேஷ் பாபு, தமன்னா நடித்த ஆகடு படத்தில் குத்தாட்டம் போட்ட ஸ்ருதி ஹாஸன் ரூ.40 லட்சம் வாங்கியுள்ளார்.

சார்மி

சார்மி

நாயக் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆட நடிகை சார்மி பெற்ற சம்பளம் ரூ. 40 லட்சம். அதிக சம்பளம் கிடைப்பதால் முன்னணி நடிகைகள் குத்தாட்டம் போட தயங்குவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Leading actresses are ready to do item numbers as the remuneration is high. Tamanna even asked what is wrong in doing item numbers as producers are offering a hefty amount.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil