சூர்யா, கார்த்தி, விஜய், அஜீத்.... அனுபவங்களைச் சொல்லும் தமன்னா!

By Shankar

தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துவிட்டேன். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள். ஆனால் அஜீத் என்னை மிகவும் கவர்ந்தவர் என்று கூறியுள்ளார் தமன்னா.

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்துள்ளார் தமன்னா. அஜீத் ஜோடியாக அவர் நடித்துள்ள வீரம் படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது.

இந்த நேரத்தில் வீரம் பட அனுபவங்கள், தான் ஜோடியாக நடித்த நடிகர்களுடனான அனுபவங்கள் பற்றியெல்லாம் அவர் மனம் திறந்துள்ளார்.

வீரம் ஏன்? எப்படி?

வீரம் ஏன்? எப்படி?

வீரம் படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், "நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். வீரம் படத்தில் என் கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது. சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் ஏற்கனவே நடித்துள்ளேன். வீரம் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னார். சிறு நகரத்தில் வசிக்கும் தமிழ்ப் பெண். கலாச்சாரம் மிக்கவள். இந்த வேடத்தில் நடிக்க ரொம்பப் பிடித்திருந்தது. ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

அஜீத்திடம் கற்றவை

அஜீத்திடம் கற்றவை

இப்படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவங்களை மறக்க முடியாது. அவர் என்னை முழுமையாக மாற்றிவிட்டார். சினிமாவில் நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

‘வீரம்' தலைப்பு அவருக்கு மிகவும் பொருத்தமானது. அவர் மிகவும் தைரியமானவர். தன்னை சுற்றி இருப்பவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அழகானது. படப்பிடிப்புக்கு வரும்போது லைட்பாய் முதற்கொண்டு அவரது ஊழியர்கள் என் ஊழியர்கள் எல்லோரிடமும் பாகுபாடில்லாமல் சமமாக மதிப்பு கொடுத்து பேசுவார்.

சூர்யா - கார்த்தி

சூர்யா - கார்த்தி

சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தேன். மறக்க முடியாத அனுபவம். அவர் தம்பி கார்த்தியுடனும் நடித்தேன். இருவருமே அவரவர் குணம் மற்றும் வேலைகளில் வித்தியாசமானவர்கள்.

பையாவைப் பிடிக்கும்...

பையாவைப் பிடிக்கும்...

தமிழில் நான் நடித்த படங்களிலேயே கார்த்தியுடன் நடித்த பையா-தான் ரொம்பப் பிடிக்கும். என் கேரக்டர் மறக்க முடியாதது.

விஜய்யுடன்

விஜய்யுடன்

விஜய்யுடன் சுறா படத்தில் நடித்தேன். அவர் ஒரு ஜென்டில்மேன். மென்மையான மனிதர். அவருடன் நடிக்கும் யாருக்கும் மீண்டும் ஒரு முறை சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

தென்னிந்திய மொழிப் படங்கள்

தென்னிந்திய மொழிப் படங்கள்

நான் இந்திப் படங்களில் நடித்தாலும், தென் இந்திய மொழி படங்களில் நடிக்கவே அதிக விருப்பமாக உள்ளது. என் விருப்பப்படி சந்தோஷமாக வாழ்கிறேன். எதுவரை இந்த வாழ்க்கை நீடிக்குமோ, அதுவரை இப்படியே வாழ ஆசை," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X