வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பது உண்மைதான், ஆனால்..! - தமன்னா
வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்ப்பது உண்மைதான். ஆனால் எனக்கு திருமணம் பற்றி யோசிக்கத்தான் நேரமில்லை என்று கூறியுள்ளார் தமன்னா.
நடிகை தமன்னா மீண்டும் தமிழில் பிஸியாகிவிட்டார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' இரண்டாம் பாகத்தில் அவர்தான் நாயகி. தமிழ், தெலுங்கில் தயாராகும் 'பாகுபலி' மற்றும் ஒரு தமிழ்ப் படம், இரண்டு தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

காதல் புதிதில்லை
இதற்கிடையில் தமன்னா காதலில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஏற்கெனவே இரு முறை சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் தமன்னா என்பது நினைவிருக்கலாம்.

வதந்திதான்
இந்தக் காதல் விவகாரம் குறித்து தமன்னாவிடம் கேட்டபோது, "நான் காதலிப்பதாக வதந்திகள் பரவி உள்ளன. இதில் உண்மை இல்லை. யாரையும் இதுவரை காதலிக்கவில்லை.

நேரமில்லை
எனக்கு காதலிப்பதற்கு நேரமும் இல்லை. படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். படப்பிடிப்புக்காக ஊர், ஊராக பறக்கிறேன்.

மாப்பிள்ளை பார்த்துக் கொண்டுதான் இருக்காங்க
என் திருமணத்தை முடிக்க வீட்டில் தீவிரமாக உள்ளனர். இருப்பவர்கள் மாப்பிள்ளை பார்க்கலாம். ஆனால், நான்தான் அதற்கு தயாராக இல்லை. சில வருடங்கள் கழித்த பிறகு திருமணத்தில் கவனம் செலுத்துவேன். இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில்தான்', என்றார்.


Click it and Unblock the Notifications











