மில்க் பியூட்டி தமன்னாவிற்கு 26 வயசாச்சு

By Manjula

சென்னை: தமிழ் சினிமாவின் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் நடிகை தமன்னா இன்று தனது 26 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

மகாராஸ்டிரா மாநிலம் மும்பையில் சந்தோஷ் - ரஞ்சனி பாட்டியா தம்பதிகளுக்கு 1989 ம் வருடம் டிசம்பர் மாதம் 21 ம் தேதி தமன்னா மகளாகப் பிறந்தார்.

தமன்னாவின் உடன் பிறந்த சகோதரர் பெயர் ஆனந்த் பாட்டியா.

15 வயதில்

15 வயதில்

2005 ம் ஆண்டு தனது 15 வது வயதில் சந்த் ஸா ரோஷன் சேரா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் தமன்னா அறிமுகமானார். அதே ஆண்டு ஸ்ரீ என்ற படத்தின் மூலம் டோலிவுட்டிலும் இவர் கால் பதித்தார்.

கேடி

கேடி

2006 ம் ஆண்டு ரவிகிருஷ்ணா - இலியானா இணைந்து நடித்த கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகில் தமன்னா அறிமுகமானார். தொடர்ந்து பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படம் தமன்னாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

வெற்றி நாயகி

வெற்றி நாயகி

தொடர்ந்து வெளியான படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா மற்றும் சிறுத்தை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகியாக தமன்னா மாறினார்.

வீரம்

வீரம்

இடையில் சில காரணங்களால் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்த தமன்னாவை தனது வீரம் படத்தின் மூலம் அஜீத் மீட்டு வந்தார். வீரம் படத்தில் அஜீத்தின் காதலியாக கோப்பெருந்தேவி என்னும் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார்.

பாகுபலி

பாகுபலி

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியான பாகுபலி, தமன்னாவின் மார்க்கெட்டை மீண்டும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த இந்தப் படத்தில் பிரபாஸின் காதலியாக, அவந்திகா என்னும் புரட்சிப்பெண் காதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார்.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த தமன்னாவிற்கு "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்மி. உனக்கு இது மற்றொரு நல்ல ஆண்டாக அமையட்டும். கடவுள் எப்போதும் உன்னை ஆசிர்வதிப்பார்" என்று ஆர்யா தனது பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்.

11 வருடங்களில்

11 வருடங்களில்

நடிக்க வந்த 11 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இதுவரை 35 படங்களுக்கும் அதிகமாக நடித்திருக்கிறார். இதில் ஹேப்பி டேஸ், பாகுபலி (தெலுங்கு) மற்றும் கல்லூரி, கண்டேன் காதலை ஆகிய படங்கள் தமன்னாவின் திரையுலகில் சொல்லிக் கொள்ளும் படங்களாக அமைந்திருக்கின்றன.

பாகுபலி 2

பாகுபலி 2

தமன்னா தற்போது பாகுபலி 2, ஊப்ரி(தமிழ்,தெலுங்கு) மற்றும் விஜய் சேதுபதியின் தர்மதுரை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு தவிர்த்து நகைக்கடை ஒன்றையும் தமன்னா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மேலும் வெற்றிகளைக் குவிக்க இந்த இனிய நாளில் தட்ஸ்தமிழ் ரசிகர்கள் சார்பாக உங்களை மனமார வாழ்த்துகிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமன்னா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X