Tamanna Net Worth: சமந்தாவை விட அதிகம்.. மில்க் பியூட்டி தமன்னாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: நடிகை தமன்னா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த தமன்னா இன்றளவும் இந்தியளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட்டில் சமீப காலமாக அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் தமன்னா ஓடிடியிலும் தொடர்ந்து வெயிட்டுக் காட்டி வருகிறார்.
இந்த பூனையும் பால் குடிக்குமா என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு புத்தாண்டில் விஜய் வர்மாவுக்கு லிப் கிஸ் கொடுத்த வீடியோ வெளியாகி அவரது காதல் லீலைகள் அம்பலமாகின. இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு தான் திருமணம் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

சர்ப்ரைஸ் என்ட்ரியாக இந்த ஆண்டு ரகுல் ப்ரீத் சிங், அதிதி ராவ், சோபிதா துலிபாலா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டனர். 35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.
85 படங்கள்: 2005ம் ஆண்டு இந்தியில் வெளியான சாந்த் சே ரோஷன் சேரா படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ படத்தில் நடித்து அறிமுகமானார். 2006ம் ஆண்டு தமிழில் ரவிகிருஷ்ணா, இலியானா நடித்த கேடி படத்தில் வில்லியாக நடித்த தமன்னா 2007ம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக நடித்தார். பான் இந்தியா நடிகையாக வலம் வரும் தமன்னா இதுவரை 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏகப்பட்ட வெப்தொடர்களில் சமீப காலமாக உச்சகட்ட கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார்.
100 கோடி பாக்ஸ் ஆபிஸ்: இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்து 100 கோடி வசூல் படமாக மாறியது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் சொதப்பி வந்த நிலையில், சம்மருக்கு வெளியான அரண்மனை 4 திரைப்படம் ஜாக்பாட் அடித்தது. பாலிவுட்டில் வெளியாகி 700 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்த ஸ்ட்ரீ 2 படத்திலும் தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு: மும்பையில் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வருகிறார் நடிகை தமன்னா. ஒரு படத்துக்கு 5 முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அரண்மனை 4 படத்துக்கு இவரது சம்பளம் 8 முதல் 10 கோடி வரை இருக்கும் என்றும் கூறுகின்றனர். நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு 80 முதல் 100 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தமன்னாவின் சொத்து மதிப்பு 125 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக ஒடேலா 2வில் தமன்னா மாஸ் காட்ட காத்திருக்கிறார். தமன்னாவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பு: நடிகர்கள் தொடர்பான சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் வெளியாக சேமிக்கப்படும் தகவல் மட்டுமே தவிர அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











