ரஜினியுடன் ஒண்ணு... கமலுடன் ஒண்ணு... - தமன்னாவின் ஆசை
பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த தமன்னாவுக்கு ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமாம்.
தமன்னாவுக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் கோலிவுட் படங்களில் நடிக்க அவர் ஆர்வமாகவே உள்ளார்.

கேடியில் அறிமுகம்
பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா நடித்த கேடி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் தமன்னா.

எஸ்.ஜே.சூர்யா முதல் சூர்யா வரை
அதைத் தொடர்ந்து தமன்னா எஸ்.ஜே. சூர்யா, தனுஷ், சூர்யா, விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்தார்.

கார்த்தி-தமன்னா கெமிஸ்ட்ரி
கார்த்தியுடன் அவர் நடித்த பையா படம் பேசப்பட்டது. காரணம் கார்த்தி, தமன்னா ஜோடிப் பொருத்தம். அதன் பிறகும் அவர் காத்தியுடன் சேர்ந்து சிறுத்தை படத்தில் கலக்கி இருந்தார்.

கமல், ரஜினி கூட நடிக்க ஆசை
பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த தமன்னாவுக்கு உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க ஆசையாக உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











