வெறித்தனமான வொர்க் அவுட் … பட்டையை கிளப்பும் தமன்னா!
ஹைதராபாத் : இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான குயின் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா இப்பொழுது நடித்து வருகிறார்.
சுந்தர் சி-யின் ஆக்சன் திரைப்படத்திற்குப் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகாத இவர் இப்பொழுது நவம்பர் ஸ்டோரி என்ற தமிழ் வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார்.
அந்தாதுன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தமன்னா அதற்காக கடுமையான ஒர்க்அவுட் செய்து வரும் நிலையில் ஜிம்மில் ஒர்க்கவுட் முடித்துவிட்டு எடுத்த புகைப்படம் இப்பொழுது வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

மார்க்கெட் பல மடங்கு
முதல் படத்தில் பார்ப்பதை போலவே இன்றும் அதே இளமையுடன் அதே க்யூட்னஸ் மாறாமல் இருக்கும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது மார்க்கெட் பல மடங்கு உயர்ந்திருக்க ஹிந்தியில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் வெப் சீரிஸில்
தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்சன் படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகாத நடிகை தமன்னா இப்போது நவம்பர் ஸ்டோரி என்ற தமிழ் வெப் சீரிஸில் நடித்து கொடுத்துள்ளார். விரைவில் இது வெளியாக உள்ளது. அதே சமயம் தெலுங்கிலும் 11 ஹார்ஸ் என்ற சீரிஸிலும் நடித்துள்ளார்.
சிரிப்புக்கு நாங்க கேரண்டி
வெங்கடேஷ்,வருண் தேஜ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட பக்கா காமெடி மற்றும் கமர்ஷியல் திரைப்படமான F3 மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது அதே கூட்டணியில் உருவாகும் இந்த பாகமும் வெற்றிபெரும் என நம்பப்படுகிறது. சிரிப்புக்கு நாங்க கேரண்டி என படக்குழு தெரிவித்துள்ளது.

வெறித்தனமாக போஸ்
அந்தாதுன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகி இருக்க அதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து அசத்தி வரும் இவர் அவ்வப்போது அந்த வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில் இப்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்த கையோடு வெறித்தனமாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவைப் பார்த்து பலரும் வாயை பிளந்து பார்த்து வருகின்றனர். இதில்தான் தமன்னா முண்டா பனியனுடன் செம ஸ்லிம்மாக மெல்லிய இடையுடன் தலையில் கைவைத்தவாறு நின்று கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











