»   »  சூடு பிடிக்கும் தமன்னா

சூடு பிடிக்கும் தமன்னா

Subscribe to Oneindia Tamil

தமன்னா மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதாம்.

தெலுங்கிலும், விளம்பரப் படங்களிலும் ஹாட்டான நடிகையாக இருந்த தமன்னாஇப்போது தமிழிலும் தூள் கிளப்ப ஆரம்பித்துள்ளார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தமன்னா விளம்பரங்களில் படு பிசியான நடிகையாகஇருந்தவர். தெலுங்கு மூலம் தமிழுக்கு வந்துள்ள தமன்னா நடித்துள்ள படமான கேடிசமீபத்தில் வெளியானது. இப்படத்தில் நெகட்டிவ்வான ரோலில் நடித்திருந்தாலும்ஹீரோயின் இலியானாவை விட தமன்னாவுக்கே நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இதனால் பல புதிய தமிழ்ப் படங்களும், விளம்பரப் படங்களும் குவியஆரம்பித்துள்ளதாம். கேடியைத் தொடர்ந்து வியாபாரியில் எஸ்.ஜே.சூர்யாவுடன்ஜோடி போட்டுள்ளார் தமன்னா. இதேபோல மேலும் சில தமிழ்ப் படங்களும்தமன்னாவைத் தேடி வந்துள்ளதாம்.

அழகோடு, அட்டகாசமாக டான்ஸும் ஆடுவதால் தமன்னாவுக்கு தமிழில் பெரியரவுண்டு அடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். மேலும், கிளாமர் காட்டுவதிலும்தமன்னாவுக்கு நோ அப்ஜெக்ஷனாம். எனவே தமன்னாவைப் பிடித்துப் போடதயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறது.

ஆனால் தமன்னா கேட்கும் குண்டக்க மண்டக்க சம்பளம்தான் தயாரிப்பாளர்களைஆட வைத்துள்ளதாம். பெரிய நடிகைகள் போல 50 லட்சம் கொடுங்க,அசத்திப்புடுறேன் என்று கூறி தயாரிப்பாளர்களை ஆட்டம் காண வைக்கிறாராம். பிறகுபேரம் பேசினால், 30 லட்சத்திற்குப் படிகிறாராம்.

இப்பவே இப்படி என்றால் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் தெரியாத்தனமாக சூப்பர்ஹிட் ஆகி விட்டால் திரிஷா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டாலும் கேட்பார் எனதயாரிப்பாளர்கள் மத்தியில் பயம் கலந்து பீதி ஏற்பட்டுள்ளதாம்.

இதேபோல ஹீரோக்கள் மத்தியிலும் தமன்னா மீது பிரியம் ஏற்பட்டுள்ளதாம்.அவர்களும் தமன்னாதான் வேணுங்கண்ணா என்று தயாரிப்பாளர்களையும்,இயக்குநர்களையும் பிராண்ட ஆரம்பித்துள்ளதால், முன்னே பின்னே ஆனாலும்பரவாயில்லை என்று தமன்னாவை மொய்த்து வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

தமன்னா காட்டில் சூறாவளியுடன் கூடிய சூப்பர் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால்மற்ற நடிகைகளின் மார்க்கெட்டில் இடியும், மின்னலுமாக இருக்கிறதாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil