அது நான் இல்லீங்கோ, எல்லாம் பொய்: பதறிய தமன்னா

By Siva

சென்னை: தன்னை பற்றி தீயாக பரவிய தகவல் குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

தமன்னா தற்போது இரண்டு தமிழ் படங்கள் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படமான சயீரா நரசிம்ம ரெட்டியில் தமன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவரின் கதாபாத்திரம் குறித்து ஒரு தகவல் தீயாக பரவியது.

தமன்னா

தமன்னா

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் என்று ஆளாளுக்கு பேசத் துவங்கினர். இந்த தமன்னாவுக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்ற விமர்சனம் கிளம்பியது. அவருக்கு எல்லாம் வில்லித்தனம் செட்டாகாது என்றார்கள் ரசிகர்கள். இந்த தகவல் காற்று வாக்கில் தமன்னாவிடமும் சென்றது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அடப்பாவிகளா, என்னை பற்றி இப்படியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தமன்னா அதிர்ச்சி அடைந்தார். இந்த பேச்சுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்த அவர் விளக்கம் அளித்துள்ளார். சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நான் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

வில்லி

வில்லி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வித்தியாசமாக நடிக்கிறேன் என்ற பெயரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த படம் அண்மையில் வெளியானது. நடிகை என்னவோ தன் நடிப்பை நினைத்து பெருமைப்பட்டார். ஆனால் அவரின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது. இதையடுத்து படம் ஊத்திக் கொண்டது.

வித்தியாசம்

வித்தியாசம்

வித்தியாசம் காட்டுகிறேன் என்ற பெயரில் அந்த முன்னணி நடிகை புதுமுயற்சி எடுத்து தோல்வி அடைந்ததை பார்த்து தான் தமன்னா பதறிப் போய் விளக்கம் அளித்துள்ளார். தமன்னாவின் முகத்திற்கு வில்லியாக நடித்தால் சரிபட்டு வராது. அதனால் அவர் வில்லியாக நடிக்கக் கூடாது என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது ஏன், என்னை பற்றி மட்டும் இப்படி எல்லாம் வதந்தி பரவுகிறது என்று தமன்னா கடுப்பில் உள்ளாராம். இது போன்ற வதந்திகளை எல்லாம் எவன் கெளப்பிவிடுறான்னே தெரியவில்லையே, அவன் மட்டும் கையில கெடச்சான் அவ்வளவு தான் தமன்னா கோபம் அடைந்தாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X