ஒட்டுத் துணி இல்லாமல்.. என்ன தமன்னா நீங்களுமா.. வைரலாகும் பில்லோ சேலஞ்ச் புகைப்படம்!

சென்னை: உடலில் ஆடை ஏதும் அணியாமல் தலையணையை மட்டும் வைத்து முக்கிய பாகங்களை மறைத்தப்படி செய்யும் பில்லோ சேலஞ்சை முன்னணி நடிகை தமன்னாவும் செய்துள்ளார்.

Recommended Video

Top Celebrities Quarantine | Lock Down Diaries

லாக்டவுன் உத்தரவால் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் பிரபலங்கள் பலவிதமான சவால்களை செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அதிலும், இந்த கிளுகிளுப்பான பில்லோ சேலஞ்சிற்கு இளைஞர்கள் மத்தியில் கூடுதல் மவுசு ஏற்பட்டு இருக்கிறது.

விதவிதமான சவால்கள்

விதவிதமான சவால்கள்

ஒர்க்கவுட் செய்தபடியே டி-சர்ட் அணிவது, டல்கோனா காபி போடுவது, வீட்டை சுத்தம் செய்வது, ஜெனிஃபர் லோபஸின் பவுல் சேலஞ்ச் என இந்த லாக்டவுன் காலத்தில் வெரைட்டி வெரைட்டியாக சவால்கள் சமூக வலைதளத்தில் முளைத்த வண்ணம் இருக்கின்றன. அதில், லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது தான் இந்த பில்லோ சேலஞ்ச்.

ஒட்டுத் துணி இல்லாமல்

ஒட்டுத் துணி இல்லாமல்

பில்லோ சேலஞ்சில் ஈடுபட வேண்டும் என்றால், உடலில் வேறு எந்த ஆடையும் அணிந்து கொள்ளாமல், வெறும் தலையணையை மட்டுமே உடையாக உடுத்தி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில், சிலர் உள்ளாடைகளை அணிந்து கொண்டும் சீட்டிங் செய்து வருகின்றனர்.

பிரபல நடிகைகள்

பிரபல நடிகைகள்

உலகளவில் பிரபலங்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பில்லோ சேலஞ்சை மக்கள் பலரும் செய்து அசத்தி வருகின்றனர். குழந்தைகள், ஆண்கள் என யாரும் இந்த சவாலை விட்டு வைக்காத நிலையில், நம் நாட்டிலும் சில நடிகைகள் இந்த சவாலை செய்து அசத்தியுள்ளனர். நேகா கக்கர், பாயல் ராஜ்புத், சாய் லோகுர் உள்ளிட்ட நடிகைகள் இந்தியாவில் இந்த சவாலை பிரபலமாக்கி உள்ளனர்.

ஒர்க்கவுட்

ஒர்க்கவுட்

இந்த லாக் டவுனில் கவர்ச்சியாக எந்தவொரு போட்டோவையும், வீடியோவையும் போடாமல், ஒர்க்கவுட் மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார் நடிகை தமன்னா. பாலிவுட் முன்னணி நடிகைகளே இந்த பில்லோ சேலஞ்சை செய்யாத நிலையில், தமன்னா செய்திருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

மட்ட மல்லாக்க

மட்ட மல்லாக்க

கால்களில் சிகப்பு நிற ஹீல்ஸ் அணிந்து கொண்டு, வெள்ளை நிற பில்லோ விலகி விடாமல் இருக்க, Gucci பிராண்ட் பெல்ட்டை அதில் இருக்கிக் கட்டிக் கொண்டு மட்ட மல்லாக்க, உடலில் வேறு எந்த உடையும் இன்றி, செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

மற்ற நடிகைகள்

மற்ற நடிகைகள்

தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கி வரும் முன்னணி நடிகையான தமன்னா, இந்த பில்லோ சேலஞ்சை செய்துள்ள நிலையில், மற்ற பிரபல நடிகைகளும் இந்த தலையணை ஆடையை உடுத்தியபடி போஸ் கொடுப்பார்களா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல லட்ச லைக்குகளை அள்ளியுள்ள தமன்னாவின் இந்த புகைப்படத்தை பிரபல தொகுப்பாளினி பாவ்னா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X