தமன்னாவோட அம்மா எப்படி இருக்காரு பாருங்க.. சின்ன வயதிலேயே ‘காவாலா’ நடிகை கலக்குறாரே!

சென்னை: 34 வயதாகும் நடிகை தமன்னா இந்த ஆண்டு இறுதியில் விஜய் வர்மாவை திருமணம் செய்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தியதில் இருந்தே திருமண தேதியை சொல்லுங்க என சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை டார்ச்சர் செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக கலக்கி வருகிறார் நடிகை தமன்னா. கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான 'காவாலா' பாடல் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் பாடலாக மாறியது.

tamannaah bhatia childhood heroine

இந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்ய காரணமாக மாறினார் தமன்னா. மும்பையில் பிறந்து வளர்ந்த தமன்னாவின் சிறு வயது புகைப்படங்களும் அவரது அம்மாவுடன் அவர் இருக்கும் இளமை காலத்து போட்டோக்களும் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

tamannaah bhatia childhood heroine

15 வயதிலேயே ஹீரோயின்: 1989ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பிறந்த நடிகை தமன்னா பாலிவுட்டில் 2004ம் ஆண்டே நடிக்க வந்த நிலையில், அவர் நடித்த முதல் படமான சாந்த் சா ரோஷன் செஹ்ரா 2005ம் ஆண்டு வெளியானது. 2006ம் ஆண்டு ரவி கிருஷ்ணா, இலியானா நடிப்பில் வெளியான கேடி படத்தில் வில்லியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமான தமன்னா எஸ்.ஜே. சூர்யாவின் வியாபாரி படத்தில் ஹீரோயினாக மாறினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி மற்றும் மலையாள படங்களிலும் நடிகை தமன்னா நடித்துள்ளார்.

tamannaah bhatia childhood heroine

குழந்தைப் பருவத்திலேயே செம க்யூட்: நடிகை தமன்னாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன. சந்தோஷ் மற்றும் ரஜினி பாட்டியாவுக்கு மகளாக பிறந்தவர் தான் தமன்னா. மும்பையில் படித்து வளர்ந்து மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக மேக்கப் போட ஆரம்பித்த தமன்னா இத்தனை ஆண்டுகள் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.

தமன்னாவோட அம்மா: நடிகை தமன்னாவோட அம்மா பெயரே ரஜினி தான். குழந்தை தமன்னாவை தூக்கி வைத்துக் கொண்டு எவ்வளவு அழகா போஸ் கொடுத்து நிக்கிறாங்க பாருங்க. தமன்னாவை எல்லாரும் மில்க் பியூட்டி என சொல்லிக் கொண்டாடி வரும் நிலையில், அதன் ஒரிஜினல் ஓனரே இவங்க தான் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

tamannaah bhatia childhood heroine

குடும்பத்துடன் தமன்னா: தமிழில் நவம்பர் ஸ்டோரீஸ் வெப்சீரிஸில் சுடிதார் அணிந்து ஹோம்லியாக நடித்த தமன்னா இப்படியே போனால் ஹீரோக்களுக்கு அக்காவாகவும் அம்மாவாகவும் ஆக்கி விடுவார்கள் என நினைத்து இந்தி வெப்சீரிஸ்களான ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் போட்ட கவர்ச்சி ஆட்டம் காரணமாக மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். தமன்னா தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன. இந்த ஆண்டு ஸ்ட்ரீ 2 மற்றும் வேதா படங்களில் நடனமாடிய தமன்னா அடுத்ததாக தெலுங்கில் உருவாகி வரும் ஒடெல்லா 2 படத்தில் சாமியார் வேடத்தில் நடித்து வருகிறார்.

tamannaah bhatia childhood heroine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X