பால் வெள்ளை தமன்னாவின் லைஃப் ஸ்டைல்.. இவ்வளவு ஃபிட்டாவும் பியூட்டியாவும் இருக்க காரணம் என்ன தெரியுமா?
சென்னை: இந்திய திரையுலகில் ஜொலிக்கும் பான் இந்தியா நடிகை தமன்னா. அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து அதே அழகு, அதே உடல்வாகு என செம பியூட்டியாக இருக்கிறார். ஒருவரின் அழகும் உடலமைப்பும் சீராக இருக்க அவரது லைஃப் ஸ்டைல் ரொம்பவும் முக்கியமானது. அப்படி இருக்கும்போது பான் இந்தியா ஸ்டார், இந்தியாவின் கவர்ச்சி நாயகியாக ஜொலிக்கும் தமன்னாவின் லைஃப் ஸ்டைல் குறித்து தெரிந்து கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது.
தமன்னாவின் மெல்லிதான உடல் அமைக்கு அவரது கடுமையான உடற்பயிற்சி முக்கிய காரணம் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் ஜிம்மில் கடுமையாக ஒர்க்-அவுட் செய்கிறாராம். எடையைத் தூக்குதல், புஷ்-அப்கள் மற்றும் ஸ்குவாட் போன்ற பயிற்சிகள் அவரது வொர்க்அவுட்டின் முக்கிய பகுதியாகும். இது படப்பிடிப்புகளில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், தேவையற்ற கலோரிகளை எரிக்கவும் கார்டியோ கட்டாயமாகும். டிரெட்மில், சைக்கிள் ஓட்டுதல் போன்ற கார்டியோ பயிற்சிகளுடன், மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் யோகாவையும் தவறாமல் செய்கிறார். இது உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. யோகா அவரது தினசரி மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வழியாகவே பின்பற்றி வருகிறாராம்.

உடற்பயிற்சியும் உணவும்: உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, சரியான உணவுப் பழக்கமும் அதே அளவு முக்கியம் என்பதில் தமன்னா உறுதியாக இருக்கிறார். அவரது உணவில் புரதம் (முட்டை, சிக்கன்) மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் (பழுப்பு அரிசி, ஓட்ஸ்) அளவு அதிகமாக இருக்கும். இது அவருக்கு நாள் முழுவதும் ஆற்றலை அளிப்பதுடன், படப்பிடிப்புகளுக்குத் தேவையான புத்துணர்ச்சியையும் பராமரிக்க உதவுகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க, போதுமான தண்ணீர் மற்றும் ஜுஸ்களும் குடிக்கிறார். சுத்தமான தண்ணீர் சருமப் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. இது அவரது கவர்ச்சியான தோற்றத்திற்கு ஒரு அடிப்படை காரணம் என்றே கூறலாம்.
இவைதான் காரணமே: மேலும் தமன்னா உணவைத் தவிர்க்கவே மாட்டார். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த ஜூஸ்களையோ, கூல்டிரிங்குகளையோ அவர் குடிப்பதே இல்லை. ஆரோக்கியமான உணவை மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கிறார். இது எடையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது .இத்துடன் தினமும் இரவும் குறைந்தது 7-8 மணி நேரம் சரியான தூக்கத்தை உறுதிசெய்கிறார். இப்படி சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் என தனது பிசியான சினிமா வாழ்க்கைக்கு இடையில் அதை உறுதி செய்து இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாகவும் வெற்றிகரமான நடிகையாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











