Odela 2 Trailer: கோமியத்தை வித்துக்கூட பொழச்சிக்க முடியும்.. தமன்னா பேசிய வசனம்.. ட்ரோல் ஆகுது!
சென்னை: இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ஓடேலா 2 படத்தின் டிரைலர் வெளியான நிலையில், அதில், இடம்பெற்ற ஒரு வசனத்தை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். காவாலா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய தமன்னா பாலிவுட் வெப்சீரிஸ்களில் எல்லாம் ஆபாசத்தின் உச்சிக்கே சென்று நடித்திருந்தார்.
அரண்மனை 4 படத்தில் ஆவியாக நடித்து அசத்திய தமன்னா தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள ஓடேலா 2 படத்தில் சாமியாராக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். கெட்ட சக்தியை அழிக்கும் சிவசக்தி வடிவாகவே தமன்னா இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

டிரைலர் முழுவதும் மிரட்டலான காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், அதில் இடம்பெற்ற ஒரே ஒரு வசனம் மட்டும் ட்ரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஓடேலா 2 டிரைலர்: மீனா, ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா என பல நடிகைகள் கவர்ச்சியாகவும் நடித்துள்ளனர். அதே சமயத்தில் சாமியாகவும் நடித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகை தமன்னா தற்போது கவர்ச்சி ரூட்டை கடந்து கடவுள் அவதாரம் எடுத்துள்ள படம் தான் ஒடேலா 2. மகா கும்பமேளாவில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அசோக் தேஜா இயக்கத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகியுள்ள ஒடேலா 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகிறது.
கோமியம் வித்துக்கூட: சிவனின் வாகனமான பசுவை இந்து மக்கள் வழிபாடு செய்து வணங்கி வரும் நிலையில், சிவனின் ரூபமாக நடித்துள்ள தமன்னா இந்த படத்தில் "நாம நிக்கிறதுக்கு தேவை பூமாதா, நாம வாழ்றதுக்கு தேவை கோமாதா, நீங்க வாழ மாட்டைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை.. கோமியத்தை வித்துக்கூட பொழச்சிக்கலாம்" என்கிற வசனத்தை பேசியுள்ளார். இந்த வசனத்துக்கு தற்போது சமூக வலைதளத்தில் கலவையான வரவேற்புகள் கிடைத்துள்ளன.
சனாதன தர்மம்: தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஓடேலா 2 படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் ரொம்பவே சரியாக பொருந்துகிறது என்றும் சனாதன தர்மத்தை சினிமாவில் இதைவிட சிறப்பாக யாருமே சொல்லிவிட முடியாது என ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்: "தமன்னாவின் odela 2 டிரெய்லர் பார்க்க போனால் "நீங்க இருப்பதற்கு பூ மாதா, வாழ்வதற்கு கோமாதா. நீங்க வாழ கோமாதாவை ஏன் கொல்றீங்க, அதோட உச்சாவை எடுத்து வித்தாலும் வாழலாம்" என்று வசனம் பேசுறாங்க தமன்னா. என்ன டா டயலாக் இது, எவண்டா எழுதி கொடுத்தான், அதை ஏன் இப்படி பேசுது தமன்னா" என நெட்டிசன்கள் ஓடேலா 2 படத்தின் டிரைலரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அடுத்த கங்கனா ரனாவத்: நடிகை தமன்னா அடுத்த கங்கனா ரனாவத்தாக மாறிக்கொண்டு இருக்கிறார் என்றும் சீக்கிரமே பாஜகவில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். கோமியத்தை வித்து யார் உயிர் பிழைக்கிறா? காசு கொடுத்து எந்த கேனயன் வாங்குறான் என்றும் கேள்விகள் கிளம்பியுள்ளன. டோலிவுட் திரையுலகம் சங்கிவுட்டாக மாறிவிட்டது என்றும் அனைத்து படங்களிலும் இதை பயன்படுத்தி வியாபாரம் ஆக்குகின்றனர் என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











