தகதகன்னு மின்னுறாரே தமன்னா.. மில்க் பியூட்டின்னு சும்மாவா சொன்னாங்க.. இந்தியளவில் டிரெண்டிங்!
சென்னை: நடிகை தமன்னா Do Patti படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவர் அணிந்து வந்த கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் இந்தியளவில் #TamannaahBhatia ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். பான் இந்தியா நடிகையாக தமன்னா மாறியதில் இருந்தே பாலிவுட்டில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் ஆடியதில் இருந்தே கவர்ச்சி சிலையாக மாறிவிட்டார். இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதே போல பாலிவுட்டில் ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 திரைப்படத்திலும் தமன்னா கவர்ச்சி நடனமாடியிருந்தார். அந்த படம் 700 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
ஓடிடியில் அதிக ரசிகர்கள்: நவம்பர் ஸ்டோரீஸ் வெப்சீரிஸில் எல்லாம் ஹோம்லி லுக்கில் நடித்த தமன்னாவை பெரிதாக ஓடிடி ரசிகர்கள் கண்டுக்கொள்ளவே இல்லை. ஆனால், அதன் பின்னர் அவர் நடித்த ஜீ கர்தா மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் தாராள கவர்ச்சி காட்டி தமன்னா படுக்கையறை காட்சிகளில் எல்லாம் படு போல்டாக நடித்த நிலையில், அவருக்கு ஓடிடியில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு ஓடிடி வெப்சீரிஸ்களிலும் படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா.
Do Patti வெப்சீரிஸ்: கஜோல் மற்றும் க்ரித்தி சனோன் நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான தோ பாட்டி வெப்சீரிஸ் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி தேவதையாக வந்து நிற்க அவரை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் தற்போது #TamannaahBhatia ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தமன்னாவின் ஹாட் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அதிகளவில் அதில் ஷேர் செய்து வருகின்றனர்.
யார் அதிக கவர்ச்சி?: இந்திய சினிமாவில் மில்க் பியூட்டி என்றால் அது தமன்னா மட்டும் தான் என ஏகப்பட்ட ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். தமன்னாவுடன் நடிகைகள் சமந்தா, பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா மற்றும் சில பாலிவுட் நடிகைகளை வைத்து கம்பேர் செய்தும் யார் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருவது என தமன்னா ரசிகர்கள் படையெடுத்து பதிவுகளை போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications