ஆறு நிமிட டான்ஸ்.. கோடியில் சம்பளம்.. கோவாவை சூடாக்கிய தமன்னா!
சென்னை: கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகை தமன்னா பாட்டியா ஆடிய நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒளி, இசை, கடற்கரை காற்று என அனைத்தும் ஒன்றாக சேர்ந்த இரவில் தமன்னாவின் எனர்ஜெட்டிக் டான்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாமல், சமூகவலைத்தளத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
புத்தாண்டு இரவு, கோவாவின் புகழ்பெற்ற பாகா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தமன்னா மேடையேறி நடனமாடினார். சுமார் ஆறு நிமிடங்கள் மட்டுமே அவர் மேடையில் வந்து நடனமாடினார். நீல நிற உடையில் அவர் அணிந்திருந்த உடை, டான்ஸ் என அனைத்தும் ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டுவிட்டது. 6 நிமிடம் மட்டுமே அவர் ஆடிய டான்ஸ் இணையத்தில் பல மணி நேரங்கள் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், அந்த குறுகிய நேர நிகழ்ச்சிக்காக தமன்னா ₹6 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

நடிகை தமன்னா டான்ஸ்: இந்த தகவல் வெளியாகியதும், "ஆறு நிமிடங்களுக்கு இவ்வளவு சம்பளமா?" என இணையவாசிகள் ஆச்சரியத்துடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் தமன்னாவின் நட்சத்திர அந்தஸ்தை சுட்டிக்காட்டி ஆதரவு தெரிவிக்க, மற்றவர்கள் இது அளவுக்கு மீறிய தொகை என விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். மேடையில் நடிகை தமன்னாவின் கிளாமர் லுக், கவர்ச்சி,உடல் மொழி, ஹிட் பாடல்களுக்கு அவர் கொடுத்த ஆட்டம் ஆகியவை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் தமன்னாவின் டான்ஸ் வீடியோக்களை பார்த்தவர்களும் அவரது நடனத்தை பாராட்டி வருகின்றனர்.
வெறும் 6 நிமிடம் கோடியில் சம்பளம்: இந்த நிகழ்வு, கோவா புத்தாண்டு கொண்டாட்டங்களில் பிரபல நடிகர்களின் நிகழ்ச்சிகள் எவ்வளவு பெரிய வணிக முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தமன்னா மேடையில் வெறும் 6 நிமிடம் மட்டுமே ஆடி இருந்தாலும், தமன்னாவிற்கு இருக்கும் பெயரால் அது கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒன்றாக மாறி உள்ளது. மொத்தத்தில், ரசிகர்களுக்கு தமன்னாவின் டான்ஸ், நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இருந்துள்ளது. தமன்னாவின் இந்த புத்தாண்டு டான்ஸ், 2026-ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











