என் அழகின் ரகசியம் என்ன தெரியுமா? லிப் கிஸ் விவகாரத்தை மறந்து டிப்ஸ் கொடுத்த தமன்னா!

சென்னை : நடிகை தமன்னாவை பார்க்கும் போது இளசுகள் முணுமுணுக்கும் பாடல், அட வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா என்ற பாடல் தான்.

அந்த அளவு சுத்தமான பாலில் திரட்டி எடுத்து வெண்ணைப்போல சும்மா பளபளவென்று இருப்பார்.

பல ரசிகர்களும் இவரின் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டு கேட்டு அலுத்துப்போன நிலையில், தற்போது அழகின் ரகசியம் குறித்து ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

நடிகை தமன்னா

நடிகை தமன்னா

திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் கேடி திரைப்படம் அறிமுகமான தமன்னா, குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

நடிகை தமன்னா பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவு நடந்த பார்ட்டியில் இருவரும் கட்டிப்பிடித்து லிப் கிஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல பரவியது. இருவரும் டேட்டிங் போறாங்க, காதலிக்கிறாங்க, திருமணம் செய்ய போறாங்க என்று பல வதந்திகள் சோஷியல் மீடியாவையே திக்குமுக்காடவைத்துள்ளது.

அழகின் ரகசியம் இது தான்

அழகின் ரகசியம் இது தான்

இப்படி தமன்னா பற்றி கிசுகிசு ஒரு பக்கம் பரவிக்கொண்டு இருக்க, நடிகை தமன்னாவோ, தனது அழகின் ரகசியம் குறித்து ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சந்தனம், காபி தூள், தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தினமும் தடவி வந்தால் முகம் பளபளவென்று இருக்கும். மேலும், தயிர், ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் மேலும் சருமம் அழகாகும் என கூறியுள்ளார்.

அம்மாவின் டிப்ஸ்

அம்மாவின் டிப்ஸ்

இந்த டிப்சை தினமும் பாலோ பண்ணுங்க என்றும், இதை என் அம்மா எனக்கு சொல்லி கொடுத்தாங்க இதுதான் என் அழகின் ரகசியம் என்று கூறியுள்ளார். நடிகை தமன்னா மேக்கப் இல்லாமல் பொது இடத்தில் எப்போதும் வலம் வருவார். தமன்னாவின் இந்த வீடியோவை பெண் ரசிகைகள் வைரலாக்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X