Tamannaah Bhatia childhood: அப்பவே அப்படியா.. குழந்தைப் பருவத்திலேயே தமன்னா என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: சமந்தாவை ஓவர் டேக் செய்து விட்டு பாலிவுட் ஓடிடி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து தாறுமாறாக கவர்ச்சி விருந்து கொடுத்து ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள நடிகை தனது குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்றையும் தற்போது பதிவிட்டுள்ளார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ள தமன்னா பாலிவுட்டில் ஓடிடியில் செம பிசியாகி உள்ளார்.

வரும் ஜூன் 15ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ள ஜீ கர்தா மற்றும் ஜூன் 29ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 உள்ளிட்ட ஓடிடி படைப்புகளின் டீசர்கள் வெளியாகி ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளன.

Tamannaah Bhatia shares childhood throwback stage performance photo

மில்க் பியூட்டி தமன்னா: 15 வயதில் பாலிவுட்டில் வெளியான சந்த் சா ரோஷன் சேரா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. தெலுங்கில் அதே ஆண்டு ஸ்ரீ படத்திலும் தமிழில் 2006ம் ஆண்டு ரவிகிருஷ்ணா, இலியானா நடிப்பில் வெளியான கேடி படத்தில் வில்லியாகவும் அறிமுகமானார் தமன்னா.

தமன்னாவின் பொன்மேனியை பார்த்த ரசிகர்கள் அவரை மில்க் பியூட்டி என்றே அழைத்து வருகின்றனர். வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, சுறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Tamannaah Bhatia shares childhood throwback stage performance photo

ஜெயிலர் ஹீரோயின்: தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை தமன்னா.

விஷாலின் ஆக்‌ஷன் படம் தோல்வியை தழுவிய நிலையில், அதன் பின்னர் தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் போக தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர், சுந்தர். சி இயக்கி நடிக்கும் அரண்மனை 4 படத்தில் வாய்ப்பு என ஜாக்பாட் அடித்து வருகிறது.

Tamannaah Bhatia shares childhood throwback stage performance photo

வெப்தொடர்களில் எல்லை மீறி: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலேயே இந்தி வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் எல்லாம் தாராளம் காட்டி நடித்துள்ளார் தமன்னா.

சமீபத்தில் வெளியான ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டீசர்கள் தமன்னாவின் ஹாட்னஸ் காரணமாகவே சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Tamannaah Bhatia shares childhood throwback stage performance photo

அப்பவே அப்படி: நடிகை தமன்னா சிறு வயதில் இருக்கும் போதே ஸ்டேஜில் நடனமாடிய த்ரோபேக் சைல்ட் ஹுட் போட்டோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அப்பவே அப்படி செம அழகாக டான்ஸ் ஆடுகிறாரே தமன்னா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும், பீச்சில் கையில் கிளாஸ் உடன் தமன்னா ஆட்டம் போடும் வீடியோவையும் அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ஷேர் செய்துள்ளார். ராஷி கன்னா, சமந்தா என நடிகைகள் தொடர்ந்து ஓடிடியில் நடிப்பதற்கு கோடிக் கணக்கில் சம்பளம் கிடைத்து வரும் நிலையில், சினிமாவை தாண்டிய கவர்ச்சியை ஓடிடி படைப்புகளுக்கு சென்சார் இல்லாத காரணத்தால் கிளாமர் ஃபீஸ்ட் கொடுத்து வருகின்றனர்.

தமன்னாவின் இந்த லேட்டஸ்ட் த்ரோபேக் புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் ஹார்ட்டின் எமோஜிக்களை அள்ளி வீசி வருகின்றனர். தமன்னாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகபட்சமாக 20 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X