தமன்னா பிறந்தநாள்.. 36 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?.. மும்பையில் 3 வீடுகள்.. சொத்து மதிப்பு என்ன?

சென்னை: நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தில் வில்லியாக அறிமுகமானவர். அதனையடுத்து கல்லூரி படத்தில் ஹீரோயினாக மாறினார். இரண்டு படங்களில் கல்லூரி அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இப்போது ஹிந்தியில் பிஸியாக இருக்கிறார். இன்று அவர் தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில்; தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கேடி படத்தில் வில்லியாக தமிழில் அறிமுகமானவர் தமன்னா. படம் தோல்வியடைந்தாலும் இவரது நடிப்புக்கு தீனி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கல்லூரி படத்தில் ஹீரோயினாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன் காரணமாக தமன்னாவின் மார்க்கெட்டும் வளர ஆரம்பிக்க; விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானார். அவர்களுடன் ஜோடி போட்டு நடித்த படங்களில் சுறா தவிர்த்து மற்ற படங்கள் பெரும்பாலும் ஹிட்டாகின.

தெலுங்கிலும் பிஸி: தமிழில் பிஸியாக எப்படி இருந்தாரோ அதேபோல் தெலுங்கிலும் பிஸியானார். அங்கும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ரசிகர்களால் ஸ்லிம் பியூட்டி உள்ளிட்ட பெயரால் கொண்டாடப்பட்டார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவரது ஆட்சிதான் தமிழில் நடந்தது குறிப்பிடத்தக்கது. கோ படத்தில்கூட தமன்னாவை ஹீரோவை புக் கமிட் செய்தால்தான் நான் ஹீரோவாக நடிப்பேன் என சிம்பு ஒரு கண்டிஷன் வைத்ததாக அப்போது பேச்சு ஒன்றும் எழுந்தது.

Tamannaah Birthday Net Worth Reportedly 130 Crore Luxury Homes amp amp Cars
Photo Credit:

ஹிந்தியில் தமன்னா: இப்படி பலமாக அடித்துக்கொண்டிருந்த தமன்னா அலைக்கு திடீரென இங்கு மவுசு குறைந்ததை அடுத்து உடனடியாக தனது ரூட்டை மாற்றி பாலிவுட்டுக்கு பறந்தார். அங்கு நடிப்போடு கவர்ச்சியையும் காண்பிக்க சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி பல ஹிந்தி படங்களில் ஒரு பாடலுக்கு ஓவர் கவர்ச்சி நடனம் ஆடுகிறார். அதற்காக கோடி கணக்கில் சம்பளமாகவும் பெறுகிறார். அப்படி அவர் ஆடும் பாடல்கள் படத்தின் வெற்றிக்கும் மைலேஜ் ஏற்றுவதாக இருக்கிறது.

பெர்சனல் வாழ்க்கை: இதற்கிடையே நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த சூழலில் அவர்களது உறவு பாதியில் முறிந்தது. இப்போது சிங்கிளாக இருக்கிறார். தமிழிலும் அவரது கவனம் அவ்வப்போது வந்து செல்கிறது. ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட் அவர்; அரண்மனை 4 படத்தில் நடித்தார். அடுத்ததாக அவரிடம் பெரிய தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றே தெரிகிறது.

தமன்னா பிறந்தநாள்: இந்நிலையில் தமன்னா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லிவரும் சூழலில்; சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரிடம் மொத்தம் 130 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கிறதாம். மும்பையில் வெர்சோவா கடற்கரை பகுதியில் 14ஆவது மாடியில் அப்பார்ட்மெண்ட் வைத்திருக்கும் அவர்; இதுதவிர்த்து மூன்று வீடுகளையும் சொந்தமாக வைத்திருக்கிறார். 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW 320i, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள Benz GLE, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஜேரோ, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X