என்னது கிங் விராட் கோலியுடன் டேட்டிங்கா?.. ரகசிய திருமணமா?.. சூப்பர் விளக்கம் கொடுத்த தமன்னா

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தமன்னா. திறமை, அழகு என அத்தனையும் இருந்ததால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். திடீரென அவருக்கு இங்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தவுடன் பாலிவுட் சென்ற அவர்; அங்கும் கவனிக்கக்கூடிய நாயகிகளில் ஒருவராக இப்போது இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவரும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் டேட்டிங் செய்தார்கள் என கிளம்பிய பேச்சுக்கு தமன்னா விளக்கமளித்திருக்கிறார்.

கேடி படத்தில் வில்லியாக அறிமுகமானவர் தமன்னா. அந்தப் படம் சரியாக போகவில்லை. ஏனெனில் காஸ்ட்டிங்கில் தயாரிப்பு தரப்பும், இயக்குநர் தரப்பும் சமரசம் செய்துகொண்டது. 7ஜி நாயகன் ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். நன்றாகவே நடித்திருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதால் படம் தோல்வி. அறிமுகமான முதல் படம் தோல்வியடைந்தாலும் தமன்னாவுக்கு அவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும், அவரது திறமையும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

நாயகி உதயம்: அதுமட்டுமின்றி இவர் ஹீரோயினாக நடிக்க வேண்டியவர் என்று குரல்கள் சன்னமாக எழுந்த சூழலில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இவரை கல்லூரி படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதனைத் தொடர்ந்து தமிழின் டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். வரிசையாக தமிழ், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்த அவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன.

Tamannaah clarifies on dating rumours with Virat Kohli
Photo Credit:

பாலிவுட் என்ட்ரியும், காதலும்: உடனடியாக சுதாரித்துக்கொண்ட தம்மு பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனக்கான மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டார். அந்த சமயத்தில்தான் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். இரண்டு பேரும் மிக தீவிரமாக காதலித்ததால் விரைவில் திருமணம் என்றும் சொல்லப்பட்டது. நிச்சயம் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டு பாலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வரும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

பிரிவு டூ கிசுகிசு: ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்கள் தங்கள் காதலை பிரேக் அப் செய்துகொண்டார்கள். பிரேக்கப்பிற்கு பிறகு படு பிஸியாக படங்களில் கமிட்டாகிவருகிறார். இது ஒருபக்கம் இருக்க கடந்த 10 வருடங்ககளுக்கு முன்பு தமன்னாவும், கிரிக்கெட் வீரர் கிங் விராட் கோலியும் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தார்கள். அந்த சமயத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது எனவும், அவர்கள் டேட்டிங் செய்தார்கள் எனவும் பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்தல் ரசாக்கை ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பின.

தமன்னா விளக்கம்: இந்நிலையில் அவர் இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கமளித்திருக்கிறார். அவர் பேசுகையில், "விளம்பர படத்தில் நடிப்பதற்காக மட்டும்தான் நான் அவரை ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அந்த விளம்பரத்துக்கு நான் அவரை சந்தித்ததும், அவரிடம் பேசியதும் இல்லை. அதேபோல் நகை கடை திறப்பு விழாவில் அப்துல் ரசாக்கை சந்தித்தது தற்செயலானது. மற்றபடி அவரது வாழ்க்கை எப்படிப்பட்டதென்றுகூட தெரியாது. இந்த மாதிரியான வதந்திகள் எல்லாம் சங்கடத்தை கொடுக்கக்கூடியவை" என்றார். அவரது இந்தப் பேட்டி 15 வருடங்களாக இருந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X