Tamannaah - இரவில் விஜய்யுடன் ஒரு ரவுண்ட்- தமன்னா விஷயத்தில் அப்போ அது கன்ஃபார்ம்தான் போல
மும்பை: Tamannaa (தமன்னா) நடிகை தமன்னா இரவில் ஊர் சுற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ அது கன்ஃபார்ம்தான் போல என கமெண்ட் செய்துவருகின்றனர்.
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் அவரை பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன் படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகிறது.

ஜெயிலரில் தமன்னா: தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்ற கருத்து பரவலான எழுந்த சூழலில் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்துவருகிறார். அதேபோல் சுந்தர் சி இயக்கும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்திலும் தமன்னா கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதலில் தமன்னா: தமிழில் டாப் ஹீரோயினாக இருந்தபோது நடிகர் கார்த்தியுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் தமன்னா. ஒருவழியாக அந்த சர்ச்சை முடிந்து இப்போதும் மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தமன்னா. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விஜய் வர்மாவுக்கு தமன்னா கொடுத்த லிப் லாக் அதை உறுதி செய்யும்படி அமைந்தது.

புதிய வீடியோ: இந்நிலையில் தமன்னா - விஜய் வர்மா தொடர்பான புதிய வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இரவில் விஜய் வர்மாவுடன் தமன்னா காரில் செல்லும் காட்சியும், வீடியோ எடுக்கும் ரசிகர்களை பார்த்து இருவரும் கை அசைக்கும் காட்சியும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இருவரும் காதலிப்பது உண்மைதான் போல என கமெண்ட் செய்துவருகின்றனர். விஜய் வர்மாவும், தமன்னாவும் லஸ்ட் ஸ்டோரில் 2வில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











