Tamannaah Explanation - என்னது 5 கோடி ரூபாய் கேட்டேனா?.. பதறிப்போய் விளக்கம் கொடுத்த தமன்னா

சென்னை: Tamannaah Explanation (தமன்னா விளக்கம்) பாலகிருஷ்ணாவின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட தமன்னா ஐந்து கோடி ரூபாய் கேட்டதாக தகவல் வெளியான சூழலில் அதனை அவர் மறுத்துள்ளார்.

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.

 Tamannaah explains about she asking 5 crores for one song

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

பாலிவுட்டில் பிஸி: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன் படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகிறது.

 Tamannaah explains about she asking 5 crores for one song

ஜெயிலரில் தமன்னா: தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்ற கருத்து பரவலாக எழுந்த சூழலில் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்துவருகிறார். அதேபோல் சுந்தர் சி இயக்கும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்திலும் தமன்னா கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 கோடி ரூபாய்: இந்தச் சூழலில் அனில் ரவிபுடி பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு தமன்னா ஆடினால் நன்றாக இருக்கும் என நினைத்து அவர் தமன்னாவிடம் கேட்டதகாவும்; அதற்கு தமன்னாவோ ஐந்து கோடி ரூபாய் கொடுத்தால் நடனம் ஆடுகிறேன் என சொன்னதாகவும் தகவல் வெளியானது.

 Tamannaah explains about she asking 5 crores for one song

தமன்னாவின் மறுப்பு: இந்நிலையில் இந்த தகவலை தமன்னா மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனில் ரவிபுடி சாருடன் சேர்ந்து வேலை பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அவர் மீதும், பாலகிருஷ்ணா மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் என்னை பற்றிய ஆதாரமற்ற இந்த செய்திகளை படிப்பதும், அவர்கள் படத்தில் ஒரு பாடலுக்கு நான் ஆடுவதாக கூறுவதும் கவலை அளிக்கிறது. இது போன்று எழுதுவதற்கு முன்பு தயவு செய்து உண்மையைதெரிந்துகொள்ளுங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X