தமன்னா இப்படி அசிங்கப்பட்டுட்டாரே ?.. கொடுக்குற மாதிரி கொடுத்து.. என்ன நடந்தது?

மும்பை: கோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. இதன் காரணமாக பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கே பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். அந்தவகையில் சுந்தர்.சி இயக்கத்தில் புருஷன் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து தமன்னாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவர் நடித்த பையா, அயன், படிக்காதவன், சிறுத்தை படங்கள் வரிசையாக மெகா ஹிட்டாகின. எனவே அப்போதைக்கு தமன்னாவின் அலை பலமாக அடித்தது. கண்டிப்பாக இன்னும் பல வருடங்களுக்கு தமன்னாதான் கோலிவுட்டை ஆட்சி செய்யப்போகிறார் என்றுதான் அவரது ரசிகர்கள் எல்லாம் நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டிருந்தார்கள். இடையே தெலுங்கிலும் அவர் பிஸியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamannaah Fan Moment Goes Viral Netizens React to Awkward Flower Incident
Photo Credit:

சரிந்த மார்க்கெட்: அவர் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தமிழிலும், தெலுங்கிலும் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்தது. நடிகர் கார்த்தியுடன் நடித்தபோது இரண்டு பேரும் காதலித்தார்கள். ஆனால் அதை விரும்பாத சிவகுமார் முக்கிய புள்ளி ஒருவரை வைத்து மிரட்டி தமிழ்நாட்டிலிருந்தே அனுப்பி வைத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அந்த சமயத்தில் ஓடியது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கே படு பிஸியாக நடித்துவருகிறார்.

Also Read
போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?.. நான் அப்படி பேசியது ஒருவருக்கு இன்ஸ்பிரேஷன்.. தனுஷ் ஓபன் டாக்
போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?.. நான் அப்படி பேசியது ஒருவருக்கு இன்ஸ்பிரேஷன்.. தனுஷ் ஓபன் டாக்

தமிழிலும் பிஸிதான்: மேலும் ஒரு பாடலுக்கு அதீத கவர்ச்சி நடனத்தையும் போடுகிறார் அவர். பாலிவுட்டில் வரிசையாக நடிக்கும் அவர் தமிழிலும் அவ்வப்போது நடித்துதான் வருகிறார். கடைசியாக அவர் தமிழில் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். மேலும் அரண்மனை 4 படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் மட்டுமே கமிட்டாகிவரும் அவர்; இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் புருஷன் படத்திலும் நடித்துவருகிறார். நிச்சயம் இந்தப் படம் தனக்கு தமிழில் கம்பேக்காக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.

பெர்சனல் வாழ்க்கை: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த விஜய் வர்மாவை காதலித்தார் தமன்னா. இரண்டு பேரும் தீவிரமாக காதலித்தார்கள். வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் கிடைத்தது. கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த சூழலில்; சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். விஜய்யை பிரிந்த தமன்னா இப்போதுவரை சிங்கிளாகவே இருக்கிறார். இனிமேல் தனது கரியரில்தான் முழு கவனத்தை செலுத்தவிருப்பதாகவும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் தமன்னா தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது மும்பையில் பொதுவெளிக்கு சென்ற அவருடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் தன்னிடம் இருந்த பூக்களை தமன்னாவிடம் கொடுத்து போஸ் கொடுத்தார். அந்த பூக்களை தமன்னாவிடம் கொடுத்துவிட்டு ரசிகர் சென்றுவிடுவார் என்று எதிர்பார்த்தால்; அவரோ ஃபோட்டோ எடுத்து முடித்ததும் தமன்னாவிடமிருந்து அந்த பூக்களை வாங்கி சென்றுவிட்டார். இதனைப் பார்த்த நெட்டிசன்களோ தமன்னாவுக்கு இப்படி அசிங்கமா போச்சே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Read more about: tamannaah தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X