காதல் முறிவு பற்றி தமன்னா ஓபன் டாக்.. சரியான துணையை தேர்ந்தெடுக்கவில்லையா?.. ஓவர் ஃபீலிங்
சென்னை: தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் கடந்த சில காலமாக காதலித்துவந்தார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது இரண்டு பேரும் தங்கள் காதலை பிரேக்கப் செய்துகொண்டார்கள். இது இரண்டு பேரின் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர்களது காதல் முறிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தீவிர அலசலில் ஈடுபட்டிருக்கும் சூழலில் தமன்னா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவுக்கு இங்கு வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து ஹிந்திக்கு சென்றார். அங்கு அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததைத் தொடர்ந்து பல படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்தார். ஹிந்தியில் அவர் பிஸியாக வலம் வந்தாலும் தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் கடைசியாக அரண்மனை 4 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
விஜய் வர்மாவுடன் காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவுக்கும், தமன்னாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்தது. இதனால் அவர்கள் இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கல் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக கடந்த வருடம் விஜய் அளித்த ஒரு பேட்டியில் அடுத்த வருடத்துக்குள் எங்களது திருமணம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வருடம் அவர்களது திருமணம் நடக்காமல் காதல் பிரேக்கப்தான் நடந்திருக்கிறது.
தமன்னாவின் பேட்டி: அவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "காதல் என்றால் என்ன என்பது குறித்து நிறைய பேருக்கு குழப்பம் இருக்கிறது. ஒரு உறவுக்குள் நிபந்தனைகள் வந்தால் அங்கு காதல் காணாமல் போய்விடுகிறது. நிபந்தனையற்றதுதான் காதல். காதலுக்குரியவர்களை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்.

அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்: நான் யாராவது ஒருவரை நேசிக்கிறேன் என்றால்; அவர் செய்ய நினைப்பதை நான் அனுமதிக்க வேண்டும். அவரை அப்படியேத்தான் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் இப்போது நான் கற்றுக்கொண்டேன். நான் சிங்கிளாக இருப்பதைவிடவும் ஒரு உறவில் இருப்பதை மகிழ்ச்சியாக உணர்ந்தேன். எனக்கென்று ஒரு துணை இருக்கிறார் என்ற உணர்வு என்னை நிம்மதியாகவும், நன்றாகவும் உணர வைத்தது. அது ஒரு மிக அற்புதமான உணர்வு என்றுதான் நான் சொல்வேன்.
கவனமாக தேர்ந்தெடுங்கள்: ஆனால் அந்தத் துணை எப்படிப்பட்டவர் என்பது ரொம்பவே முக்கியமானது. எனவே நீங்கள் உங்கள் துணையை தேர்ந்தெடுக்கும்போது புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு நீங்களே உங்களைப் பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ, 'அப்போ விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்தது தவறு என்று தமன்னா மறைமுகமாக சொல்கிறாரோ' என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள். முன்னதாக இவர்களது காதல் பிரேக்கப் ஆனதற்கு திருமணம் தாமதமானதுதான் காரணம் என்று சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











